சென்னையில் மஜக இல்ல மண விழா

மஜக மாநிலச் செயலாளர் ஷஃபி இல்ல நிகழ்வில்….

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் SDPI டெஹ்லான் பாகவி வாழ்த்து…

பொதுச் செயலாளர் நாசர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு…..

ஜனவரி 14

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி அவர்களது மகள் ஆசிகா என்பவருக்கும் மணமகன் அஸாருதீன் என்பவருக்கும் திருமணம் சென்னை மாதாவரத்தில்
மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில்
நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மஜக பொதுச்செயலாளர் மௌலா நாசர் அவர்கள் இத்திருமண நிகழ்வில் முன்னிலை வகித்தார்.

திருமண நிகழ்வினை முன்னிட்டு அந்த பகுதி முழுவதும் கட்சி கொடிகள், பதாகை என பிரம்மாண்டமான வரவேற்பை வழங்கினர்.

இத்திருமண நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் தாஜுதீன், மாநில செயலாளர்கள் கோவை ஜாபர், நெய்வேலி இப்ராஹீம், மாநில துணைச்செயலாளர்கள் அஸாருதீன், பார்த்திபன், பேராவூரணி சலாம், ஏ.ஜெ.எஸ்.தாஜுதீன், எஸ்.எம் நாசர், மற்றும் பல்வேறு பொறுப்புகளில் உள்ள மாநில,மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_தலைமையகம்
14.01.24