உலக தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் இன்பம் பொங்க கொண்டாடப்படுகிறது..
நமது நாட்டில் பண்டிகைகள் என்பது ஒரு சமூக இளைப்பாறலாக கருதப்படுகிறது.
உழைத்துக்கொண்டும், ஒடிக்கொண்டுமிருக்கும் சமூகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறையோடு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பெருமிதங்களில் ஒன்றாக திகழ்கிறது.
விவசாயிகளின் அறுவடை திருநாளாக முன்னிறுத்தப்படும் பொங்கல் பண்டிகை நவீன சமூகத்தில் புதுப்புது அர்த்தங்களை வெளிப்படுத்தி ஒரு கலாச்சார திருநாளாகவும் உருவெடுத்து வருகிறது.
இயற்கை விவசாயத்தின் வளர்ச்சி, நீராதார பாதுகாப்பு, சூழலியல் சமன்பாடு, கால்நடைகளின் உரிமைகள் ஆகியன குறித்த கருத்தாக்கங்களை இத்திருநாளில் முன்னெடுக்க உறுதியேற்போம்.
பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
14.01.2024