திருச்சியில் பள்ளிவாசலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!


அக்.12,
இன்று திருச்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், பள்ளிவாசலை இடித்தது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

இது குறித்து இன்று மாலை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக முதல்வருக்கு வாட்ஸ் அப் வழியே அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது…

திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் திருவண்ணைகாவல் எனுமிடத்தில் காலம், காலமாக வக்பு இடத்தில் இருந்த பள்ளிவாசலின் முன்பகுதியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று சட்ட விரோதமாக இடித்துள்ளனர்.

இது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

ஏனெனில் இது குறித்து தடையாணை கேட்டு நீதிமன்றத்தை அந்த ஜமாத்தினர் அணுகியுள்ளனர். அது நிலுவையில் உள்ளது.

ஜமாத்தினர், மாவட்ட கலெக்டரையும் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

இது குறித்து முறையாக அமைதி பேச்சுவார்த்தை கூட நடத்தப்படவில்லை.

இந்நிலையில் பக்கத்தில் உள்ள இதர கட்டிடங்களை விட்டு, விட்டு பள்ளிவாசலை மட்டும் அதிகாரிகள் இடித்துள்ளது கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

எனவே, தாங்கள் இதை அவசர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எடுத்துக் கொண்டு, மாவட்ட ஆட்சியர் மூலம் பள்ளிவாசலின் இடிக்கப்பட்ட முன் பகுதியை உடனே சீரமைக்க வேண்டும் என்றும், அத்துமீறிய அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .

இவ்வாறு அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதம் முதல்வரின் தனி செயலாளர் திரு.விஜயகுமார் IAS அவர்கள் வழியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனிடையே அப்பள்ளியின் ஜமாத் செயலாளர் ஜனாப் சிக்கந்தர் அவர்களிடம் அலைபேசியில் பேசிய பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இது குறித்து தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மஜக துணை நிற்கும் என்றும், அப்பள்ளி பாதுகாக்கப்படவும், சீரமைக்கப்படவும் உறுதியான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும் என்றும் கூறினார்.

முன்னதாக சம்பவம் அறிந்து மஜகவின் திருச்சி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் மஜகவினர் அங்கு சென்று ஜமாத்தினரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.