You are here

உடைய நாட்டில் …. மஜகவில் தொடரும் இணைப்பு நிகழ்வுகள்…

தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் திரளானோர் இணைந்தனர்!

பிப்.01.

கடந்த 6 மாதங்களில் தமிழகம் எங்கும் திரளானோர் பல்வேறு கட்சிகள், அமைப்புகளிலிருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து தற்போது தஞ்சை மாவட்டத்திலும் அத்தகைய நிகழ்வுகள் தொடர்கின்றது.

இன்று தஞ்சை (தெற்கு )மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடையநாடு பகுதியை சேர்ந்த சர்புதீன் தலைமையில் – சபீகான் உள்ளிட்ட இளைஞர்கள் பெரியவர்கள் என 40க்கும் மேற்பட்டோர் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டார்.

மேலும் பிப்ரவரி 10 – திருச்சி முற்றுகை போராட்ட களத்திற்கு பேராவூரணி தொகுதியிலிருந்து மட்டும் 20 வேன்களில் புறப்பட ஆயத்தமாகி உள்ளனர்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி சலாம், மாவட்ட செயலாளர் அதிரை.ஷேக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்மார்ட் சாகுல் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், மாவட்ட துணை செயலாளர் பைசல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வாஹித், ஒன்றிய செயலாளர் நூருல் அமீன், ஆகியோரும் உடனிருந்தனர்.

இவர்களுடன் அதிரை நகர செயலாளர் முகமது பாசித், நகர பொருளாளர் ரிஜுவான், நகர துணைச் செயலாளர் பஷீர் அஹமது ஆகியோரும் பங்கேற்றனர்…

தகவல்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்
31.01.24.

Top