(மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) வரலாறு காணாத பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வால் நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றை தாண்டி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் இந்த அநியாய விலை உயர்வை கண்டித்து செப்டம்பர்.10 அன்று காங்கிரஸ் கட்சி அழைப்புவிடுத்திருக்க கூடிய அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அதன் மாநில தலைமை ஆதரவு கேட்ட நிலையில் மஜக ஆதரவு அளிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அந்த பந்த் வெற்றியடைய அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 08.09.2018
Month:
MJTS தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) கரூர் மாவட்ட தலைவராக A.அப்பாஸ் S/o. அமீர் #19/20F. சீ.ஆ.கோ.ரோடு, முதல் கிராஸ், கரூர்-639001 அலைபேசி : 9786639058 நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் இவண்; #பம்மல்_சலீம் #மாநில_தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம்_MJTS 08.09.2018
பேரறிவாளன் விடுதலைக்காக காத்திருக்கிறோம்! திருப்பூர் மஜக பொதுக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
திருப்பூர்.செப்.08., திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமையில், மாவட்ட பொருளாளர் S.முஸ்தாக் அகமது வரவேற்புரையுடன் மக்கள் எழுச்சியோடு நேற்று (07.09.2018) மாலை நடைப்பெற்றது. இதில் மாநில துணைச்செயலாளர் ஷமீம் அகமது பேசும்போது, #பாசிச_பாஜக_ஓழிக என்று முழக்கம் எழுப்பிய சோஃபியாவிற்கு ஆதரவாக, நாடு முழுக்க மக்கள் ஆதரவு திரண்டிருப்பதை சுட்டி காட்டி, இதுதான் இன்றயை இந்திய அரசியல் என்பதாக பேசினார். அடுத்து பேசிய துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சமீபத்தில் #கோவையில்_ஐந்து_முஸ்லிம்_இளைஞர்கள் மீது நாடக வழக்கு பதிவு செய்யப்பட்டு UAPA சட்டம் பாய்ச்சப்பட்டுருப்பதை கண்டித்து பேசினார். அடுத்து பேசிய திருப்பூர் #தெற்கு_தொகுதியின்_அதிமுக_MLA_குணசேகரன் அவர்கள் உலகளாவிய பிரச்சனைகளை எல்லாம் உதாரணம் காட்டி சட்டசபையில் பேசக்கூடியவர், உங்கள் #பொதுச்செயலாளர்_தமிமுன்_அன்சாரி என்று பாராட்டினார், திருப்பூரில் மஜக சமூக நல்லிணக்க கூட்டத்தை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றவர், #மஜக_மற்ற_கட்சிகளை_விட_மாறுப்பட்டது என்று புகழ்ந்தார். தனக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்த போது, இன்ஸ்சுரன்ஸ் மூலம் கிடைத்த ஏலரை லட்சத்தை சேர்த்து பத்து லட்சத்தை, தனது தொகுதியில் கபரஸ்தானுக்கு இடம் வாங்க தருவதாக பலத்த கைத் தட்டலுக்கு இடையே அறிவித்தார். நேதாஜி
பட்டுக்கோட்டை நகரத்தில் மஜக உதயம்.
தஞ்சை.செப்.07., தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் மனித நேய ஜனநாயக கட்சியின் கிளை அமைக்கப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி.எஸ்.எம்.எ.சலாம் தலைமையிலும், மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணன் மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை, செயல்பாடு குறித்து மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணன் மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் விளக்கி பேசினார்கள். இதில் சுமார் 25 சகோதரர்கள் உறுப்பினராக இணைந்து கொண்டனர். மேலும் இதில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை குத்துபுதீன் மாவட்ட இளைஞரணி செயலாளர் மரக்காவலசை ராஜ் முகமது, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள், கறம்பக்குடி ஜான் முகமது, ரெங்கசாமி , அதிரை நகர பொறுப்பு குழு தலைவர் ஸமது ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட #மீனவர்கள்_அணி செயலாளராக A. முஜிபுர் ரஹ்மான் S/o. அப்துல் மஜீத் #1270, இக்பால் தெரு, கோட்டைப்பட்டினம். மணமேல்குடி (வட்டம்) அலைபேசி : 8344668526 நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்_செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 07-09-2018