கோவை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. வசூல் செய்யப்பட்ட ரூபாய் 70.560 எழுபதாயிரத்து ஐநூற்றி அறுபது ரூபாய் மற்றும் நிவாரண பொருட்களை மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகளிடம் பகுதி செயலாளர் காதர், பொருளாளர் ஹாருண்ரஷீது, துணை செயலாளர் அபு, மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி,மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜீஸ், இப்ராஹிம் EBR, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .. தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி. #MJK _IT_WING. #கோவை_மாநகர்_மாவட்டம். 30.08.18
Month:
காவிரி தொலைக்காட்சி “ஆசான்” விருது வழங்கும் நிகழ்ச்சி! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
சென்னையில் காவிரி தொலைக்காட்சி சார்பில் அதன் இரண்டாமாண்டை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் சிறப்பு சாதனைகளை செய்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு "ஆசான்" விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், Sp வேலு மணி, செங்கோட்டையன், மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, இயக்குனர் வசந்த், பாடலாசிரியர் விஜய் உள்ளிட்டோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். விருதை வழங்கிய மு.தமிமுன் அன்சாரி MLA வாழ்த்துரை வழங்கி பேசியதாவது... நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்றார் அப்துல் கலாம் . அவரது பொன் மொழியை இளைய தலைமுறையிடம் வார்த்தெடுப்பது ஆசிரியர்கள் தான். அதுவும் அரசு பள்ளிகளில் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் வீட்டு பிள்ளைகள் தான் அதிகம் படிக்கிறார்கள். அங்குதான் தமிழும் பாதுகாக்கப்படுகிறது. வளர்க்கப்படுகிறது. அங்கு படிப்பவர்களை வார்த்தெடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை, காவேரி தொலைக்காட்சி, தேர்வு செய்து விருது கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் நினைத்திருந்தால் மேட்டுக்குடி பள்ளிகளையும், மேட்டுக்குடி வர்க்கத் தினரையும் தேர்வு செய்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. ஊக்குவிப்பனை ஊக்குவித்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான். என கவிஞர் வாலி எழுதினார். அரசுப் பள்ளி ஆசிரியர்களை காவேரி தொலைக்காட்சி விருது வழங்கி ஊக்குவிப்பதற்காக அவர்களை பாராட்டுகிறேன். விருது
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி..! மஜக பொதுச்செயலாளரிடம் ஒப்படடைப்பு..!!
சென்னை.ஆக.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக #கேரளா_வெள்ள_நிவாரண_நிதி மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட பொருளாளர் அமிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ரவூப் ரஹிம், பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்த ₹53,500 ரூபாயை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் மஜக தலைமையகத்தில் வைத்து நிவாரண நிதியை ஒப்படைத்தனர். கேரளா வெள்ளத்திற்க்காக மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட திருவல்லிக்கேணி, துறைமுகம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் முதல் கட்டமாக வசூல் செய்யப்பட்டது. இதில் திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகிகள், துறைமுக பகுதி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம் 28.08.2018
மாணவர் இந்தியா சார்பாக கேரள வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்கள் சேகரிப்பு..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் ஒப்படைப்பு..!!
சென்னை.ஆக.29., #மாணவர்_இந்தியா அமைப்பின் சார்பாக வசூல் செய்த வெள்ள நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களிடம் மாணவர் இந்தியா பொறுப்பாளர் தைமிய்யா மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச்செயலாளர் பஷீர் அஹமது ஆகியோர் ஒப்படைத்தனர். தகவல்; #வெள்ள_நிவாரண_பணி_குழு #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம் 29.08.2018
மஜக சார்பில் கேரளா முகாம்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது..! மஜக இணை பொதுச்செயலாளர் கொடியசைத்து வாகனங்களை அனுப்பிவைத்தார்கள்..!!
தேனி.ஆக.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி மாநில தலைமையகம் சார்பில் இன்று 29/8/2018 காலை 10 மணியளவில் கம்பம் மஜக தேனி மாவட்ட அலுவலகத்தில் நிவாரண பொருட்களை அனுப்பிவைப்பு. #மஜக_பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MA_MLA அவர்கள் ஆலோசனையின் பேரில் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு முதல் கட்டமாக #கட்டபனை முகாம்களுக்கு தேவையான சுமார் 3லட்சம் மதிப்பிலான பொருட்களும், இரண்டாம் கட்டமாக #வண்டிப்பெரியார் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான பொருட்களும், 3ம் கட்டமாக இன்று #மூனார் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குசுமார் 5லட்சம் மதிப்பிலான அரிசி, பாய், தண்ணீர் டப், குடிநீர் கேன், சீனி, உப்பு, எண்ணெய், பிஸ்கட், ரஸ்க், நாப்கின், பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.. இந்நிகழ்வில் நிவாரண பொருட்கள் கொண்ட வாகனங்களை இணை பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தேனி மாவட்ட செயலாளர் ரியாஸ், தேனி மாவட்ட துணை செயலாளர் கம்பம் கலில் மற்றும் கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் கம்பம் நகர துணைசெயலாளர் அன்சர், மற்றும் நிர்வாகிகள் சபீக்ராஜா, ஷாஜஹான், இளைஞரணி சேர்ந்த அணிஸ், சேக்,