கடலூர்.ஆக.31., லால்பேட்டை நகரில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் 'கைகாட்டி' பேருந்து நிலையம் பல நாட்களாக இருண்ட நிலையில் கிடந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை கண்ட லால்பேட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சியினர் பேருந்து நிலையத்திற்கு மஜக சார்பில் மின்விளக்குகளை பொறுத்தினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி. #MJK _IT_WING. #லால்பேட்டை_பெருநகரம்.
Month:
நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம்..! மஜக பங்கேற்பு..!!
நாகை.ஆக.29., நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், சங்கரன் பந்தல் அருகேயுள்ள இலுப்பூர் கடை வீதியில் உத்திரங்குடி ஊராட்சி, இலுப்பூர் ஊராட்சி, எரவாஞ்சேரி ஊராட்சி, நெடுவாசல் ஊராட்சி, விசலூர் ஊராட்சிகள் ஆகிய ஊராட்சிகள் இணைந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் நடைப்பெற்றது. இம்முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ச.தியாகராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி வளர்ச்சி அலுவலர் எம்.எஸ்.அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மு.ஜகைர், ஊராட்சி செயலாளர்கள் விஸ்வ நாதன்,சத்தியா, விஜய லெட்சுமி, முத்து குமரன், மாதவன் ராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மஜக நாகை வடக்கு மாவட்ட அமைப்புக்குழு தலைவர் சங்கை தாஜ்தீன் பங்கேற்று தூய்மை என்ற தலைப்பில் பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி. #MJK _IT_WING. #நாகை_வடக்கு_மாவட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி..! மஜக மாநில தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கபட்டது..!!
தூத்துக்குடி.ஆக.30., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக #கேரளா_வெள்ள_நிவாரண_நிதி நிதிக்காக வசூல் செய்த பணம் காயல்பட்டினம் நகரம் ₹32,700 தூத்துக்குடி மாநகரம் ₹4500 மொத்தம் 37200ரூபாயை மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் வெள்ள நிவாரண நிதி வங்கி கணக்கில் இன்று செலுத்தப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம். 30.08.2018
பாழடைந்த நிலைக்கு செல்லும் அரசு நூலகம் மேம்படுத்த உதவிய மஜக..!
கடலூர்.ஆக.30., லால்பேட்டை நகரில் அமைந்துள்ள அரசு நூலகம் நாளுக்கு நாள் பாழடைந்த நிலைக்கு சென்று கொண்டே இருந்த நிலையில் நூலக பொறுப்பாளரை சந்தித்து #மனிதநேய_ஜனநாயக_கட்சியினர் தாமாக முன் வந்து மேம்படுத்த உதவுவதாக கூறினர். அதனை தொடர்ந்து இன்று காலை முதற்கட்டமாக நூலகத்தில் பழுதான டியூப் லைட்கள் மற்றும் மின்விசிறிகள் (பேன்) போன்றவைகளை புதியதாக வாங்கி கொடுத்தனர். இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் ஜாகிர், குமராட்சி ஒன்றிய செயலாளர் அலி, துபை மாநகர செயலாளர் ரஹமத்துல்லா, அபுதாபி மண்டல செயலாளர் தையூப், அபுதாபி மண்டல துணை செயலாளர் சாதுல்லா, மாணவர் இந்தியா லால்பேட்டை நகர பொருளாளர் முஹம்மது ரில்வான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி. #MJK _IT_WING. #கடலூர்_தெற்கு.
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக கேரள மக்களுக்கு திரட்டப்பட்ட நிதியைதலைமையிடம் ஒப்படைப்பு.
வேலூர்.ஆக.30., வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூர் நகர மஜக சார்பாக கடந்த இரண்டு நாட்களாக வீதிவீதியாக சென்று கேரள மக்களுக்கு திரட்டப்பட்ட நிவாரண நிதி ரூ. 50 ஆயிரம் ரூபாய்யை சிட்டி யூனியன் பேங்க் மூலம் மாவட்டச் செயலாளர் M. ஜஹீருஸ் ஜமா முன்னிலையில் தலைமையிடம் ஒப்படைப்பு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள், எஸ்டி கூரியர் நிறுவனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ... நிதி அளித்த பொது மக்களுக்கும், இதற்காக முழு மனதுடன் உழைத்த மனிதநேய சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மேற்கு_மாவட்டம் 29.08.2018