மஜக சார்பில் கேரளா  முகாம்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது..! மஜக இணை பொதுச்செயலாளர் கொடியசைத்து வாகனங்களை அனுப்பிவைத்தார்கள்..!!

தேனி.ஆக.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி மாநில தலைமையகம் சார்பில் இன்று 29/8/2018 காலை 10 மணியளவில் கம்பம் மஜக தேனி மாவட்ட அலுவலகத்தில் நிவாரண பொருட்களை அனுப்பிவைப்பு.

#மஜக_பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MA_MLA அவர்கள் ஆலோசனையின் பேரில் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு முதல் கட்டமாக #கட்டபனை முகாம்களுக்கு தேவையான சுமார் 3லட்சம் மதிப்பிலான பொருட்களும், இரண்டாம் கட்டமாக #வண்டிப்பெரியார் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான பொருட்களும், 3ம் கட்டமாக இன்று #மூனார் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குசுமார் 5லட்சம் மதிப்பிலான அரிசி, பாய், தண்ணீர் டப், குடிநீர் கேன், சீனி, உப்பு, எண்ணெய், பிஸ்கட், ரஸ்க், நாப்கின், பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது..

இந்நிகழ்வில் நிவாரண பொருட்கள் கொண்ட வாகனங்களை இணை பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தேனி மாவட்ட செயலாளர் ரியாஸ், தேனி மாவட்ட துணை செயலாளர் கம்பம் கலில் மற்றும் கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் கம்பம் நகர துணைசெயலாளர் அன்சர், மற்றும் நிர்வாகிகள் சபீக்ராஜா, ஷாஜஹான், இளைஞரணி சேர்ந்த அணிஸ், சேக், மாணவர் இந்தியா அசரப்ஒலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#வெள்ள_நிவாரண_பணி_குழு
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING

#மஜக_தேனி_மாவட்டம்
29.08.2018