சென்னையில் காவிரி தொலைக்காட்சி சார்பில் அதன் இரண்டாமாண்டை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் சிறப்பு சாதனைகளை செய்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு “ஆசான்” விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், Sp வேலு மணி, செங்கோட்டையன், மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, இயக்குனர் வசந்த், பாடலாசிரியர் விஜய் உள்ளிட்டோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.
விருதை வழங்கிய மு.தமிமுன் அன்சாரி MLA வாழ்த்துரை வழங்கி பேசியதாவது…
நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்றார் அப்துல் கலாம் .
அவரது பொன் மொழியை இளைய தலைமுறையிடம் வார்த்தெடுப்பது ஆசிரியர்கள் தான். அதுவும் அரசு பள்ளிகளில் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் வீட்டு பிள்ளைகள் தான் அதிகம் படிக்கிறார்கள்.
அங்குதான் தமிழும் பாதுகாக்கப்படுகிறது. வளர்க்கப்படுகிறது. அங்கு படிப்பவர்களை வார்த்தெடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை, காவேரி தொலைக்காட்சி, தேர்வு செய்து விருது கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் நினைத்திருந்தால் மேட்டுக்குடி பள்ளிகளையும், மேட்டுக்குடி வர்க்கத் தினரையும் தேர்வு செய்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை.
ஊக்குவிப்பனை ஊக்குவித்தால்,
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்.
என கவிஞர் வாலி எழுதினார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களை காவேரி தொலைக்காட்சி விருது வழங்கி ஊக்குவிப்பதற்காக அவர்களை பாராட்டுகிறேன். விருது பெறும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி பாயும் தமிழகத்தில், காவிரி தொலைக்காட்சி செய்தியாக பாய்வது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்
இந்நிகழ்வில் தனியரசு MLA, தி.வேல்முருகன், வழக்கறிஞர் பாலு, கோபன்னா, PT.அரசகுமார், மற்றும் கலைத்துறை, அரசு துறை, வணிக துறை, அரசியல் துறையை சேர்ந்த பிரபலங்களும், சமூக ஆர்வலர்கலும் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்