சென்னையிலிருந்து புறப்பட்டது முதல் ஹாஜிகள் விமானம்! இதயம் உருக, கண்ணீர் பெருக..!வழியனுப்பு விழா..!!

சென்னை. ஜூலை.29., இன்று சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினல் வழியாக முதல் #ஹஜ் விமானம் #தக்பீர்_முழக்கத்தோடு புறப்பட்டது.

ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மாண்புமிகு #நிலோபர்_கபீல், #ஹஜ்_கமிட்டி தலைவர் ஜப்பார், #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளரும், ஹஜ் கமிட்டி உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மற்றொரு உறுப்பினருமான டாக்டர் ஹாஜா K.மஜீத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும், விமான நிலைய அதிகாரிகளும் பங்கேற்றனர்.

புனிதப் பயண ஹாஜிகளே .. உங்கள் நலத்துக்காகவும், நம் நாட்டின் வளத்துக்காகவும் பிரார்த்தியுங்கள்… என்ற பிரார்த்தனையை முழங்கியவாறு #இமாம்_தர்வேஸ்_ரஷாதி அவர்கள் அறிவிப்புகளை செய்தவண்ணம் இருந்தார்.

ஹஜ் பயணிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கண்ணீர் மல்க கட்டியணைத்து விடைபெற்றனர்.

கோவையை சேர்ந்த நரசிம்மன் என்பவர் தனது நண்பரை கட்டிப்பித்து அழுதபடியே விடை கொடுத்து தனது அன்பையும், நட்பையும் வெளிப்படுத்தியது அங்கு நின்றிருந்தவர்களை ஈர்த்தது.

ஏராளமான பயணிகள் தமிமுன் அன்சாரி MLA அவர்களை கட்டிப்பிடித்து தங்கள் நேசத்தை வெளிப்படுத்தினர். தங்கள் பணிகள் சிறக்க புனித மெக்காவில் பிரார்த்திப்பதாகவும் அன்பொழுக கூறினர்.

ஹஜ் பயணிகள் அனைவரையும் வரவேற்று சென்னை விமான நிலையம் சார்பில் பிரம்மாண்ட தட்டி வைக்கப்பட்டிருந்தது. விமான நிலைய மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வருகை தந்து ஹஜ் பயணிகளை கவனித்தனர். அங்கே தொழுகைக்கும் வசதி செய்துக் கொடுத்தனர்.

புதிய டெர்மினலில் முதன் முதலாக ஹஜ் பயணிகள் புறப்படுவது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

யுனிவர்சல் ஷாஜஹான் போன்றவர்களும், பல அரசு ஊழியர்களும் தன்னார்வ பணியாளர்களாக வருகை தந்து தொண்டாற்றினர்.

இந்தியாவில் இருந்து இவ்வருடம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 600 பேர் புனித ஹஜ் பயணம் செய்கிறார்கள்.

இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 3829 பேர் புறப்படுகின்றனர். அதில் ஆண்கள் 1907 பேரும், பெண்கள் 1914 பேரும், 6 குழந்தைகளும் ஆவர்.
அவர்களில் இன்று மூன்று விமானங்களில் 1185 பேர் புறப்பட்டுள்ளனர்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி அவர்கள், மத்திய பாஜக அரசு ஹஜ் மானியத்தை நிறுத்திய நிலையில், தமிழக அரசு இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் #6_கோடி_ரூபாயை_மானியமாக வழங்கியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஒவ்வொருவருக்கும் தலா 16, ஆயிரம் ரூபாய் ஹாஜிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

#அமைச்சர் நிலோபர் கபீல் கூறும்போது. #தமிழக_முதல்வர் தமிழக ஹாஜிகளுக்காக இவ்வருடம் கூடுதல் இடங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்றிருப்பதாக கூறினார்.

ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார் அவர்கள் , தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்ய 19 ஊழியர்கள் அனுப்பப்படுவதாக கூறினார்.

பாவங்களை மன்னிக்க கோரியும், இதயம் உருக பிரார்த்தனைகளை முன்னிறுத்தியும் , கண்ணீர் மல்க புறப்படும் ஹஜ் பயணிகளை வழியனுப்பி மகிழ்ந்தது தமிழ்நாடு ஹஜ் கமிட்டி !

வழியனுப்பு நிகழ்வில் #மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹ்மது, #MJTS மாநில செயலாளர் பம்மல் சலீம், தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப், காஞ்சி வடக்கு மாவட்ட பொருளாளர் முகமது யாகூப், மாவட்ட துணை செயலாளர் தாம்பரம் ஜாஹீர், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி., #MJVS காஞ்சி மாவட்ட செயலர் பம்மல்காதர், மனித உரிமை அணி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பல்லாவரம் நகர மஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்