கடலூர்,ஜூன்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்களம்பேட்டை நகரம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் இஃப்தார் நிகழ்ச்சி முடிந்ததும் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் வைக்கபட்டு நகர நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியையும் வீரியமுடன் கட்சியை வளர்ச்சிபாதையில் எடுத்து செல்வதை பற்றியும் சிறப்பாக ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர், நகர செயலாளர் சைய்யது அலி, மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம்
Month:
மஜகவில் இனையும் இளைஞர் பட்டாளம் !!!
கடலூர்.ஜூன்-11.,மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்களம் பேட்டை நகரம் சார்பாக இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மஜகவின் செயல்பாட்டை தொடர்ந்து உற்று கவனித்த இளைஞர்கள் தங்களை தன்னெழிச்சியாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் M.com, அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் தங்களை மஜகவில் இனைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, மங்களம்பேட்டை நகர செயலாளர் சைய்யது அலி மற்றும் மாவட்ட நகர நிர்வாகாகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம்
இளைஞர்களை ஈர்த்த மஜக இஃப்தார் நிகழ்ச்சி..!
கடலூர்.ஜூன்-11., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்களம்பேட்டை நகரம் சார்பாக இதயங்களை இனைக்கும் சமுக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மங்களம்பேட்டையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மங்களம்பேட்டை நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் மஜக மாநில பொருளாளருக்கு சிறப்பான வரவேற்ப்பை அளித்தனர். பல்வேறு அமைப்பு கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் களந்து கொண்டு சிற்றுரை நிகழ்த்தினர். இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, மாவட்ட இளைஞர் அணி துனை செயலாளர் மன்சூர்,மங்களம்பேட்டை நகரசெயலாளர் செய்யது அலி,நெய்வேலி நகர செயலாளர் நூர்முஹம்மது,பண்ருட்டி நகர செயலாளர் யாசின், மற்றும் நகர நிர்வாகிகள் ஜமாத்பிரமுகர்கள் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #கடலூர்_வடக்கு_மாவட்டம்
ரம்ஜானை முன்னிட்டு பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு..! மஜக கோரிக்கையை ஏற்று அமைச்சர் நடவடிக்கை..!
சென்னை. ஜூன்.12., எதிர்வரும் 16.06.18 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் B.A.history,TOURISM,PRINCIPLES AND PRACTICE, AND ARCHIVES தேர்வு வைக்கப்பட்டிருந்தது. பிறை பார்த்து கொண்டாடுவதன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகை ஜூன் 15 அல்லது ஜூன் 16 தேதிகளில் வரலாம் என்பதால் இத்தேர்வை வேறு தேதிக்கு மாற்றிட வேண்டும் என #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் திரு.அன்பழகன் அவர்களிடம் நேரில் மனு கொடுத்தார். இன்று சட்டமன்றத்தில் அமைச்சர் அவர்கள் தங்கள் கோரிக்கையை ஏற்று அந்த தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்படுகிறது என மஜக பொதுச் செயலாளரிடம் கூறினார், அதற்கு மஜக சார்பில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 12.06.18
மதுரை வடக்கு மாவட்டம் மஜகவின் சார்பில் மாபெரும் ஸஹர் விருந்து நிகழ்ச்சி..! ஜமாத்தார்கள் பெண்கள் பங்கேற்பு..!!
மதுரை.ஜுன்.12., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டத்தின் சார்பாக. மதுரை ஒத்தக்கடை பெரிய பள்ளிவாசல் உள் வளாகத்தில் ஸஹர் விருந்து சிறப்பாக நடைபெற்ற்து. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் சுலைமான் தலைமை வகித்தார், கோரிப்பாளையம், ஒத்தக்கடை, புதூர், பகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர், சிக்கந்தர் மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் அலாவுதீன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒத்தக்கடை பள்ளிவாசலின் நிர்வாகிகள்கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், உட்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம் 12-06-2018