மஜக மங்களம்பேட்டை நகர ஆலோசனை கூட்டம்..! மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!!

கடலூர்,ஜூன்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்களம்பேட்டை நகரம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள்
இஃப்தார் நிகழ்ச்சி முடிந்ததும்
இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் வைக்கபட்டு நகர நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியையும் வீரியமுடன் கட்சியை வளர்ச்சிபாதையில் எடுத்து செல்வதை பற்றியும் சிறப்பாக ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர், நகர செயலாளர் சைய்யது அலி, மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்