கடலூர்.ஜூன்-11.,மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்களம் பேட்டை நகரம் சார்பாக இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மஜகவின் செயல்பாட்டை தொடர்ந்து உற்று கவனித்த இளைஞர்கள் தங்களை தன்னெழிச்சியாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் M.com, அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் தங்களை மஜகவில் இனைத்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, மங்களம்பேட்டை நகர செயலாளர் சைய்யது அலி மற்றும் மாவட்ட நகர நிர்வாகாகள் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்