கடலூர்.ஜூன்-11., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்களம்பேட்டை நகரம் சார்பாக இதயங்களை இனைக்கும் சமுக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மங்களம்பேட்டையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மங்களம்பேட்டை நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் மஜக மாநில பொருளாளருக்கு சிறப்பான வரவேற்ப்பை அளித்தனர்.
பல்வேறு அமைப்பு கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் களந்து கொண்டு சிற்றுரை நிகழ்த்தினர்.
இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, மாவட்ட இளைஞர் அணி துனை செயலாளர் மன்சூர்,மங்களம்பேட்டை நகரசெயலாளர் செய்யது அலி,நெய்வேலி நகர செயலாளர் நூர்முஹம்மது,பண்ருட்டி நகர செயலாளர் யாசின், மற்றும் நகர நிர்வாகிகள் ஜமாத்பிரமுகர்கள் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#கடலூர்_வடக்கு_மாவட்டம்