நாகையில் கருவேலமரங்கள் அகற்றும் பணிகள் தீவிரம்! MLA நேரில் ஆய்வு!

image

image

நாகை. பிப்.24., நடப்பு பதினைந்தாவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் மஜக பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள், தனது முதல் கன்னிப்பேச்சில் தண்ணீரை உறிஞ்சி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல மரங்களை முற்றிலுமாக தமிழக அரசு அகற்ற வேண்டுமென்று பேசினார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் கவனத்திற்கும் கொண்டுச் சென்றார்.

இதனிடையே கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, தமிழகமெங்கும் இதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாகை தொகுதியில் இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தினமும் இப்பணிகளின் துரிதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிகிறார்.

நாகை ECR சாலை அருகில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை நேரில் பார்வையிட்டார். பொக்லேன் இயந்திர தொழிலாளி ஒருவரை நேரில் அழைத்து பாராட்டி உற்சாகப் படுத்தினார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
24/02/2017