குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவோம்: முதமிமுன் அன்சாரி MLA கொந்தளிப்பு..!

டிச.20,

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC ஆகியவற்றுக்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்ட கண்டன மாநாடு திருப்பூரில் நடைப்பெற்றது.

இதில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நாடெங்கிலும் சாதி, மத பேதமின்றி, மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவது நாட்டின் அரசியல் சாசன சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காகத் தான் என்றார்.

இந்த சட்டங்களை தமிழ் நாட்டில் அமல்படுத்தக் கூடாது என்றும் மீறி அமல்படுத்தினால், எந்த அதிகாரிகளையும் வீதிகளுக்குள் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றவர். இதற்காக சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவோம் என கொந்தளித்தார்.

இதை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த மே.வங்கம், கேரளா, புதுச்சேரி, ஒரிஸா, பீஹார் மாநில அரசுகளை பாராட்டவும் தவறவில்லை.

மாநாட்டை முன்னிட்டு திருப்பூர் எங்கும் ‘ட்ராபிக் ஜாம் ‘ஆக இருந்தது.

பல்வேறு சமூக மக்களும் திரண்டெழுந்து இச்சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது தமிழர் ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் ஹைதர், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் நாகூர் ஹமீது ஜெகபர், மாவட்ட துணைச் செயலர்கள் ராயல் பாஷா, முஜிபுர் ரஹ்மான், பாபு உள்ளிட்ட மஜக நிர்வாகிகளும் பொதுச் செயலாளருடன் பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பூர்_மாவட்டம்.