மனிதநேய ஜனநாயக கட்சி
இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பிப்ரவரி 28-02-2017 முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கவிருக்கிறது.
பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் நாகை தொகுதியில் பிப்- 28 காலை 09-30 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.
தலைமை நிர்வாகிகள் ஆங்காங்கே இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார்கள்…
பிப்ரவரி 28-02-2017 முதல் மார்ச் 31-03-2017 வரை நடைபெறும்.
குறைந்தபட்சம் சிறிய மாவட்டங்களில் 3 ஆயிரம், பெரிய மாவட்டங்களில் 5 ஆயிரம் என புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதை இலக்காக கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
உறுப்பினர் படிவங்கள் மற்றும் உறுப்பினர் அட்டைகள் தொடர்பான பணிகளை மாநில செயலாளர் A.சாதிக் பாஷா 9841011078 அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் அவரை தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
* சுவர் விளம்பரங்கள்,
* துண்டு பிரசுரங்கள்,
* ஸ்டிக்கர்கள்
ஆகிய விளம்பர மாதிரிகள் வெளியிடப்படுகிறது. அதை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
பொதுச்செயலாளர் ஒப்புதலுடன்…..
K.M.முகம்மது மைதீன் உலவி
இணைப் பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
25-02-2017