75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில்! மஜகவின் முன் முயற்சியில் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றிய கிராமம்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கற்காடு பகுதியில் மஜக முன்னெடுப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் தேசியக்கொடி ஏற்றப்படாத ஒரு கிராமமாக இப்பகுதி இருந்து வருகிறது.

பல்வேறு சாதி, மத மக்கள் ஒற்றுமையோடு வாழும் ஊர்களில் இதுவும் ஒன்று.

75 ஆண்டுகளுக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சியின் முன் முயற்சியில் சுசீந்திரம் கற்காடு பகுதியில் மஜக சார்பில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வினை பொது மக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ச்சியினை பரிமாறிக் கொண்டனர்

நிகழ்ச்சிக்கு மாநகர பொருளாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

இதில் ஊர் தலைவர், முன்னாள் தலைமை ஆசிரியர் தர்மராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

பின்னர் அம்பேத்கார் சிலைக்கு மரியாதை செலுத்தபட்டது.

இந்நிகழ்ச்சியில்
கற்காடு அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஆசீர்பாய் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் s. பிஜ்ருள் ஹபீஸ், மாவட்ட துணை செயலாளர் முஜிப் ரகுமான், அமீர்கான் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப் அலி இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் மிஸ்பா ஆலிம், மாநகர துணை செயலாளர் மாஹீன், மற்றும் மாநகர துணை செயலாளர் பைசல், நிர்வாகிகள் மாஜித் , அசீம்,அமீன், வேல்முருகன், ராஜேந்திரன், எடிசன் ஜெனித், வினு மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்