ரம்ஜானை முன்னிட்டு பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு..! மஜக கோரிக்கையை ஏற்று அமைச்சர் நடவடிக்கை..!

சென்னை. ஜூன்.12., எதிர்வரும் 16.06.18 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் B.A.history,TOURISM,PRINCIPLES AND PRACTICE, AND ARCHIVES தேர்வு வைக்கப்பட்டிருந்தது.

பிறை பார்த்து கொண்டாடுவதன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகை ஜூன் 15 அல்லது ஜூன் 16 தேதிகளில் வரலாம் என்பதால் இத்தேர்வை வேறு தேதிக்கு மாற்றிட வேண்டும் என #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் திரு.அன்பழகன் அவர்களிடம் நேரில் மனு கொடுத்தார்.

இன்று சட்டமன்றத்தில் அமைச்சர் அவர்கள் தங்கள் கோரிக்கையை ஏற்று அந்த தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்படுகிறது என மஜக பொதுச் செயலாளரிடம் கூறினார், அதற்கு மஜக சார்பில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
12.06.18