வேலூர் மாநகரில் மஜகவின் சார்பில் 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி..!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மஜக மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றினார். மாவட்ட துணை செயலாளர் சையத் உசேன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் இளைஞர் அணி செயலாளர் அமீன், வர்தக்கர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், ஹயாத் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
15.08.2021