அறந்தாங்கி.ஜூன்.24., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 24-06-2018 ஞாயிறு மாலை 4 மணிக்கு கோட்டைப்படிணம் இக்பால் தெருவில் ஹைதர் அலி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.அஜ்மீர் அலி, எஸ்.ஒளி முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் எம்.பி. சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ் தீர்மானங்களை விளக்கி உரையாற்றினார். இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாவட்ட செயலாளர் ஷாஜிதீன், கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மனிதநேய ஜனநாயக வர்த்தக சங்க (MJVS) மாவட்ட செயலாளர் முஜி, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அஹமது ரியாஸ், அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப், அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக், பொருளாளர் அப்துல் கரீம், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் சைய்யது தாவூத், கீரமங்களம் நகர
Month:
தமிழ் உணர்வாளர்களை கைது செய்வதை கைவிட வேண்டும்! கம்பத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
தேனி.ஜூன்.24., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தேனி மாவட்ட செயலாளர் ரியாஸ் அவர்களின் இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கம்பத்தில் பத்திரிக்கையாளர்ளை சந்தித்தார்கள், அப்போது கூறியதாவது. இயக்குனர் கவுதமனை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது தேவையற்றது. தமிழ் உணர்வாளர்களை குறிவைத்து இது போன்ற கைதுகளை நடத்துவதை ஏற்க முடியாது. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆய்வுகளை நடத்தி வரும் கவர்னருக்கு எதிராக, நாமக்கலில் திமுகவினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டதை நடத்தியுள்ளனர். இது ஒரு ஜனநாயக செயல்பாடாகும். இதில் ஈடுபட்ட 192 திமுகவினர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது தேவையற்றது. தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், காவிரி உரிமை போராட்டம், மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் ஈடுப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை நாங்கள் எதிர்க்க வில்லை. விமான நிலையங்கள், அகல சாலைகள், ரயில் இருப்பு பாதைகள் ஆகியவை மக்களின் வசதிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும்
நாகையில் பன்னோக்கு விளையாட்டு கூடம் திறப்பு ..!
நாகை. ஜூன்.22., நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் பன்னோக்கு விளையாட்டு கூடம் கட்டப்பட்டு கடந்த 20.06.2018 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பூப்பந்து, கூடைபந்து, கைபந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான வசதிகள் உள்ளது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் #M_தமிமுன்_அன்சாரி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் தேவ் ஆனந்த், B.சிவா, நீச்சல் பயிற்ச்சியாளர்கள் ரஞ்சித்குமார், ஆல்பர்ட் ஜான் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் #நாகப்பட்டினம் 20/06/2018
MJTS ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.ஜூன்.21., #மனிதநேய_ஜனநாயக_தொழிர்_சங்க-த்தின் (MJTS) வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம் #MJTS மாவட்ட செயலாளர் TD. அப்ரோஸ் அஹ்மத் தலைமையில் ஆம்பூரில் நடைபெற்றது. இதில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1) அதிக அலவில் உறுப்பினர்கள் செர்த்துதல், 2) ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் உருவாக்குதல், 3) மாவட்ட நகரங்களில் (MJTS) கொடி ஏற்றுதல், போன்ற பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்(MJTS) ஆம்பூர் நகர செயலாளர் R. முஜம்மில் மற்றும் பத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்.
சவுதி அரேபியா மதினாவில் மஜக நிர்வாகிகளுடன் IKP நிர்வாகிகள் மரியாதை நிமித்தமான சந்திப்பு..!
தம்மாம்.ஜூன்.21., தம்மாம் மண்டல #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) மண்டல ஆலோசகர் செய்யது ஹமீது அவர்கள் நேற்று 21/06/2018 புதன்கிழமை உம்ரா என்னும் புனித பயணம் வந்திருக்கும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மொளலவி J.S.ரிபாய் ரஷாதி, மஜக கோவை மாவட்ட செயலாளர் Fish அப்பாஸ், மஜக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இஷ்ஹாக் ஆகியோரை IKP தம்மாம் மண்டலம் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.தகவல்..#IKP_IT_WING#IKP_தம்மாம்_மண்டல_ஊடக_பிரிவு