அறந்தாங்கி.ஜூன்.24., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 24-06-2018 ஞாயிறு மாலை 4 மணிக்கு கோட்டைப்படிணம் இக்பால் தெருவில் ஹைதர் அலி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.அஜ்மீர் அலி, எஸ்.ஒளி முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் எம்.பி. சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ் தீர்மானங்களை விளக்கி உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாவட்ட செயலாளர் ஷாஜிதீன், கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மனிதநேய ஜனநாயக வர்த்தக சங்க (MJVS) மாவட்ட செயலாளர் முஜி, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அஹமது ரியாஸ், அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப், அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக், பொருளாளர் அப்துல் கரீம், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் சைய்யது தாவூத், கீரமங்களம் நகர செயலாளர் முகம்மது புர்ஹான், ஆலங்குடி நகர செயலாளர் கான் முகம்மது, பொண்ணமராவதி ஒன்றிய செயலாளர் அப்துல்லாஹ்,
ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் சைய்யது அபுதாஹிர், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன் (செல்லஅத்தா), கோட்டைப்படிணம் நகர செயலாளர் ராஜ் முகம்மது, மாவட்ட குழு உறுப்பினர் ஹைதர் அலி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் நிறைவேற்றினார்கள்.
இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் மு.செய்யது அபுதாஹிர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இச்செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:-
1.
#சாலையை_செப்பனிட்டு_புதுப்பிக்கவேண்டும்.
அறந்தாங்கி ஆவுடையார் கோவில் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் அரசு பாலிடெக்னிக் வரை உள்ள மோசமான சாலையினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இப்பகுதியில் அதிகமாக தூசு ஏற்படுகிறது. கடைவீதியில் உள்ள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதனை சுவாசிப்பதால் பல உடல் உபாதைகளை தருகிறது. குண்டும் குழியுமான சாலையால் சிறு விபத்துகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு மத்தியில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. பல முறை பல அமைப்புகளால் கோரிக்கை வைத்தும் இன்றுவரை செப்பனிடவில்லை. எனவே மாநில நெடுஞ்சாலை துறையை கண்டித்து எதிர்வரும் 02-07-2018 திங்கள் அன்று காலை அறந்தாங்கி பெரியகடைவீதியில் அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக் தலைமையில் மக்களை திரட்டி சாலை மறியல் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
2.
#அறந்தாங்கி_மீமிசல்_கட்டுமாவடி_அறந்தாங்கி_மகளிர்_தொடர்_சுற்றுப்பேருந்து_இயக்கவேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி இரண்டாவது நகராட்சியாக திகழ்கிறது. பலநூறு கிராம மக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறந்தாங்கிக்கு பேருந்து மூலம் பயணிக்கும் சூல்நிலையில் உள்ளனர். அறந்தாங்கிக்கு பேருந்தில் பயணித்துவரும் மக்களில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம். சமீப காலத்தில் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் பல பிரச்சினைகளையும், ஆபத்துகளையும், இழப்புகளையும் சந்திக்கிறார்கள். எனவே பெண்களின் நலன் கருதி அறந்தாங்கி – மீமிசல் – கட்டுமாவடி – அறந்தாங்கி மகளிர் தொடர் சுற்றுப்பேருந்து இயக்கவேண்டும் என கோருகிறோம்.
3. #ஆவுடையார்கோவில்_கோட்டைப்படிணம்_சாலையை_முழுமையாக_புதுப்பிக்கவேண்டும்.
ஆவுடையார் கோவில் முதல் கோட்டைப்படிணம் வரை சாலை முழுமையாக புதுப்பிக்காமல் சில கிலோமீட்டர் தூரம் புதுப்பித்தும் பல கிலோமீட்டர் புதுப்பிக்காமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதால் மீமிசல் வழியாக பல கிலோமீட்டர் சுற்றி கோட்டைப்படிணம் செல்கிறார்கள். எனவே விரைவில் ஆவுடையார் கோவில் கோட்டைப்படிணம் சாலையை முழுமையாக புதுப்பிக்கவேண்டும் என கோருகிறோம்.
4. #காரைக்குடி_அறந்தாங்கி_இரயிலை_உடனடியாக_இயக்கவேண்டும்.
காரைக்குடி – அறந்தாங்கி பாதையை அகலப்படுத்துவதற்காக சில வருடங்களுக்கு முன் இரயில் சேவை நிறுத்தப்பட்டது, கடந்த 2017 டிசம்பரில் புதிய அகல இரயில் பாதையும் புதிய இரயில் நிலையமும் அமைக்கப்பட்டுவிட்டது, கடந்த ஜனவரி மாதத்தில் பல சுற்று ஆய்வு ஓட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆனாலும் இன்றுவரை இரயில் சேவை துவங்கவில்லை. அதனால் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே காரைக்குடி – அறந்தாங்கி இரயிலை உடனடியாக இயக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இன்நிகழ்வின் இறுதியில் கோட்டைப்பட்டினம் கடை வீதியில் கொடியேற்றுதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.
24.06.2018