காஞ்சி தெற்கு மாவட்டம் கல்பாக்கத்தில் (11.06.2018) நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மாநிலச்செயலாளர் A.சாதிக் பாஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்பாக்கம் சுற்று வட்டாரத்தை பல்வேறு சமூக மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் புதிய தலைமுறையின் மீதும், இயக்குநர் அமீர் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் பெ.மணியரசனை தாக்கிய சமூக விரோதிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA பேட்டியளித்தார். இந்நிகழ்வில் காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் U.ரஹ்மத்துல்லா, தலைமை தாங்கினார், IKP மாவட்டச் செயலாளர் H. அப்துல் ரஷீத் அனைவரையும் வரவேற்றார், S.சமியுல்லா மாவட்ட துணை செயலாளர், A.முஹம்மது ரஃபீக் மருத்துவ சேவை அணி செயலாளர் M.இனாயத்துல்லா மாவட்ட இளைஞரணி செயலாளர், J.தமீம் அன்சாரி மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர், K.ஜாகிர்
Month:
காயல்பட்டினத்தில் மஜகவின் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி..!
தூத்துக்குடி.ஜூன்12., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பாக #சமூக_நல்லிணக்க_இஃப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. #மஜக நகர செயலாளர் மொகுதூம் அவர்களின் தலைமையில், நகர பொருளாளர் மீரான் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப் அவர்கள் வரவேற்புரையாற்றினார், மாவட்டம் செயலாளர் ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பு உரை ஆற்றினார். இந்நிகழ்வில் காயல்பட்டினத்தை சார்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் குறிப்பாக SDPI, விசிக, நாம் தமிழர், மதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், I.N.T.J உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் காக்கும் கரங்கள் நற்பணிமன்றம், நடப்பது என்ன? ஊடக குழுமம், உரிமைக்குரல் ஊடக குழுமம் ஆகியவற்றின் நிர்வாகிகளும் நகரின் பல்வேறு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் சங்க நிர்வாகிகளும் சமூக ஆர்வாளர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைத்தது. இந்நிகழ்வு முடிந்த உடன் கூடுதலாக இருந்த கஞ்சி மற்றும் பண்டங்கள் அனைத்தையும் அருகில் அமைந்துள்ள கருனாலயா ஆதரவு அற்றோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜகவின் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாகிப், ஆழ்வார் ஒன்றிய
மஜக பரங்கிப்பேட்டை நகர ஆலோசனை கூட்டம்..!
கடலூர்.ஜூன்.12., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) அலுவலகத்தில் கத்தார் மண்டல IT WING செயலாளர் பொறியாளர்.அப்துல் ரஜ்ஜாக் தலைமையில், நகர ஆலோசகர் சகோதரர் ஹாஜா மக்தும் முன்னிலையில் கடந்த 10-06-2018 அன்று இரவு 9:00 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் பழைய நகர நிர்வாகம் கலைக்கப்பட்டு நிர்வாகிகள் ஒப்புதலுடன் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டு மாநில தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் மஜக உருப்பினர்கள் ஏற்பாடு செய்த தட்டுபந்து விளையாட்டை ஊக்கப் படுத்தும் விதமாக விளையாட்டிற்கு உதவி செய்வது தருவதாகவும் பேசப்பட்டது. இதில் நகர மஜக செயலாளர் ஹாசிம், துணைச் செயலாளர்கள் அரசாத், ஷேக் முஹம்மது, ஹூசைன் மற்றும் நிர்வாகிகள் உருப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_பரங்கிப்பேட்டை_நகரம் 11.06.2018
புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு..! சட்டமன்றத்தில் மஜக கவனஈர்ப்பு தீர்மானம்..!!
சென்னை. ஜூன்.11., கடந்த 08.06.2018 அன்று கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட வட்ட மேசை விவாதத்தில் பிஜேபி ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால், அதில் பதட்டம் உருவானது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி, அதன் செய்தியாளர், விவாதத்தில் பங்கேற்ற இயக்குனர் அமீர் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இது தமிழகம் முழுக்க பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியது. இன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் K.R. ராமாசாமி, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, உ.தனியரசு MLA, ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து, இந்த வழக்குகளை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தினர். காவல்துறையிடம் இது குறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக ! முதல்வர் அவர்கள் பதிலளித்தார். அதுபோல் திமுக உறுப்பினர்’ ராமச்சந்திரன் அவர்கள் காவிரி உருமை மீட்புக்குழு தலைவர் பே.மணியரசன் அவர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது குறித்தும் அவையில் எழுப்பி, தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றார். இதற்க்கு பதிலளித்த முதல்வர் அவர்கள், இது குறித்து இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக பதிலளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்
MKP தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல ஒருங்கிணைப்பாளராக கீழக்கரை ஹூசைன் அலைபேசி : +974 77569163 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 11.06.18