கரூர்.மே.06., இன்று கரூரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் கரூர் #அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மருத்துவ முகாமை தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் #JS_ரீஃபாயி அவர்கள் தொடங்கி வைத்தார். மாலை நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மஜக மாவட்ட அலுவலகத்தை பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA தொடங்கி வைத்தார். முன்னதாக மஜக கொடியை J.S ரீஃபாய் அவர்கள் ஏற்றி வைத்தார், பெயர் பலகையை மாநிலச் செயலாளர் #நாச்சிக்குளம்_தாஜூதீன் திறந்து வைத்தார். பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், நீட் தேர்வின் போது மாணவ - மாணவிகளுக்கு வரம்பு மீறி நடத்தப்படும் சோதனைகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது அறிவிக்கப்படாத எமர்ஜன்சியை நினைவூட்டுவதாகவும் குறிப்பிட்டார். நீட் தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது என்பதால், அதை இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும் என்றார். #நீட், #GST, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக பாஜகவுக்கு எதிரான அலை வீசுவதாக குறிப்பிட்டார். மதச்சார்பின்மை, வளர்ச்சி, ஒற்றுமை ஆகிய முழக்கங்களோடு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினால்தான் தமிழக மக்கள் #காங்கிரஸ்-க்கு வாக்கு அளிப்பார்கள் என்றும் கூறினார். மத்தியில் ஆளும் மோடி அரசு, தமிழக அரசின் குரல்வளையை நெரிப்பதாகவும், இதனால் சுதந்திரமாக செயல்பட முடியாமல்
Month:
மகன் நீட் தேர்வு எழுதும்போது தந்தை அதிர்ச்சி மரணம்! குடும்பத்தை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி MLA ஆறுதல்!
திருவாரூர்.மே.06., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்னசாமி . அவர் தனது மகன் கஸ்தூரி மாகாலிங்கத்தை #நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாக்குளம் அழைத்துச் சென்று இருக்கிறார். மாநிலம் விட்டு மாநிலம் சென்ற மனசோர்வும், வெயிலினால் ஏற்பட்ட உடல் சோர்வும் அவரை வாட்டியிருக்கிறது. இன்று காலை அவரது செல்ல மகன் எர்னாகுளத்தில் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்து இருக்கிறது. மகனோ தன் தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார். இத்துயரச் செய்தி தெரிந்ததும், நாகப்பட்டினத்திலிருந்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முதல் நபராக அந்த கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூறினார். அவருடைய மனைவியும், மகளும் கதறி அழுதனர். சற்று நேரத்தில் திருத்துறைப்பூண்டி MLA ஆடலரசன் அவர்களும், திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அவர்களும் வந்து சேர்ந்தனர். அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் #மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கூறியதாவது.. இச்சம்பவம் அனிதாவை தொடர்ந்து, இன்னொரு துயரத்தை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஏற்படுத்திருப்பதாக கூறினார். இது போன்ற குடும்பங்களின் சாபமும், கண்ணீரும் மோடி அரசையும், மத்திய அரசையும் சும்மா விடாது
MKP கத்தார் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்..!
தோஹா.மே.05., மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று (04.05.2018) நடைபெற்றது. இக்கூட்டம் கத்தார் மண்டல செயலாளர் முஹம்மத் உவைஸ் தலைமையில் நடைபெற்றது.கத்தார் பொருளாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன், கத்தார் ஆலோசகர் கீழக்கரை ஹூசைன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல் அஜீஸ், கத்தார் துணைச் செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன் , மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் அஹ்மத், துஹைல் மண்டல செயலாளர் அத்திக்கடை ஹாஜி முஹம்மது ( தளபதி ), சனையா மண்டல பொருளாளர் காட்டுமன்னார்கோயில் ஓலியுல்லா, அத்திக்கடை பாரூக் ( பல்க் ), துஹைல் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் நெல்லை ஷாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கத்தார் நிர்வாக பணிகள், மண்டலங்கள் செயல்பாடுகள், வருகின்றி ரமலான் மாதத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்படது.தீர்மானங்கள் :1. வருகிற 1 /6/2018 வெள்ளியன்று தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக மஜக மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது மற்றும் மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மவ்லவி #JS_ரிபாஃயி_ரஷாதி ஆகியோர்களை அழைத்து கத்தார் MKP சார்பாக மாபொரும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது
எதிர்வரும் ரமலானை நல்லிணக்கம் வளர்க்க பயன்படுத்தவேண்டும்..! நெய்வேலி பள்ளியில் மஜக பொதுச்செயலாளர் ஜும்ஆ உரை..!!
கடலூர்.மே.05., நேற்று (04.05.18) கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள #மஸ்ஜிதே_ரஹ்மத் பள்ளியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் ஜும்ஆ சிறப்புரை ஆற்றினார். அந்த உரையில், எதிர்வரும் ரமலானில் 30 நாட்களிலும், பள்ளிவாசல்களில் அந்தந்த ஊரைச் சார்ந்த சகோதர சமுதாயங்களை சேர்ந்தவர்களை அழைத்து நல்லெண்ண கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்றும், இப்தார் நிகழ்ச்சிகளில் அன்போடு அவர்களை உபசரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் இந்த ரமலானில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் . முயற்சிகளை ஜமாத்துக்களும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் முன்னெடுக்க வேண்டும் என்றும் திருக்குர்ஆனின் அறிவுரைகளை எல்லா மக்களுடனும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பிறகு ஜமாத் நடத்தும் அர் ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வருகை தந்தார். அங்கு +2 தகுதி உயர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதன் பிறகு நெய்வேலி நிலக்கரி அனுமின் நிலைய பொதுமேலாளர் திரு.ஞானசேகரன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். திரு. ஞானசேகரன் அவர்கள் பொதுச்செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பிறகு உள்ளூர் பிறமுகர்களையும், இதர பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் (OBC) வீரவன்னியராஜா உள்ளிட்டோரையும் சந்தித்தார். பிறகு மஜக மாநில து.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!
சென்னை.மே.04., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் அரசு கட்சி சார்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் #கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் தனியரசு MLA, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில துணைச் செயலாளர் #புதுமடம்_அனீஸ் மற்றும் பல்வேறு கட்சியினர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இதில் திரலானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சென்னை 04.05.18