“நீட் தியாகி” கிருஷ்னசாமிக்கு 3 லட்சம் நிதி உதவி! கோரிக்கையை எற்ற தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நன்றி!

கரூர்.மே.06., இன்று கரூரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் கரூர் #அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

மருத்துவ முகாமை தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் #JS_ரீஃபாயி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாலை நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மஜக மாவட்ட அலுவலகத்தை பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA தொடங்கி வைத்தார். முன்னதாக மஜக கொடியை J.S ரீஃபாய் அவர்கள் ஏற்றி வைத்தார், பெயர் பலகையை மாநிலச் செயலாளர் #நாச்சிக்குளம்_தாஜூதீன் திறந்து வைத்தார்.

பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், நீட் தேர்வின் போது மாணவ – மாணவிகளுக்கு வரம்பு மீறி நடத்தப்படும் சோதனைகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது அறிவிக்கப்படாத எமர்ஜன்சியை நினைவூட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது என்பதால், அதை இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும் என்றார். #நீட், #GST, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக பாஜகவுக்கு எதிரான அலை வீசுவதாக குறிப்பிட்டார்.

மதச்சார்பின்மை, வளர்ச்சி, ஒற்றுமை ஆகிய முழக்கங்களோடு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினால்தான் தமிழக மக்கள் #காங்கிரஸ்-க்கு வாக்கு அளிப்பார்கள் என்றும் கூறினார்.

மத்தியில் ஆளும் மோடி அரசு, தமிழக அரசின் குரல்வளையை நெரிப்பதாகவும், இதனால் சுதந்திரமாக செயல்பட முடியாமல் எடப்பாடியார் அரசு தவிப்பதாகவும் குறைக் கூறினார்.

#மஜக-வின் கோரிக்கையை ஏற்று, நீட் தேர்வின் போது, கேரளாவில் மாராடைப்பால் உயிரிழந்த கிருஷ்னசாமிக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

பேட்டியின் போது மாநில துணைசெயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாநில விவசாயி அணி செயலாளர் நாகை முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காயல் சாகுல், திருப்பூர் இக்பால், கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அஹமது கபீர், திருச்சி மாவட்ட செயலாளர் இஃப்ராஹிம்ஷா, தமிழக கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர் அருள்குமார், தந்தை பெரியார் தி.க மாவட்ட தலைவர் தனபால், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லையரசு, கரூர் மாவட்ட பொருளாளர் ஜாஹீர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வெனிஸ் ராஜா, ஷாஜகான், ரபி, மற்றும் கரூர் மாவட்ட அனைத்து ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பெருந்திரலாக கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#மஜக_கரூர்_மாவட்டம்.