திண்டுக்கல்.ஜன.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய ஆய்வுகூட்ட பணியும். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகள் A.ஹபிபுல்லா தலைமையில், பொறுப்புக்குழு உறுப்பினர் M.அனஸ் முஸ்தபா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1) உலாமாக்கள் நடத்தும் ஷரியத் பாதுகாப்பு கண்டன பொதுக்கூட்டத்திற்க்கு மஜக வின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், என அதிகமாணவர்களை அழைத்து வந்து கலந்து கொள்வதென இக்கூட்டதின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது. 2) வேடசந்தூர் ஒன்றியத்தில் மஜகவின் கிளைகளை அதிகமாக உருவாக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 3) வேடசந்தூர் மார்க்கெட் ரோடு பராமரிப்பு பணிக்காக தொண்டி 8 மாதங்கள் ஆகியும் சரிசெய்யாமல் குண்டும், குளியுமாக இருப்பதால் நெடுஞ்சாலை துறை உடனே தலையிட்டு புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம். தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுப்பது என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல்_மாவட்டம். 02/01/2018.
Month:
மஜகவில் இணைந்த இராஜஸ்தானிகள்..!
திண்டுக்கல்.ஜன.03., மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, திண்டுக்கலில் குடியுரிமை பெற்றவர்கள் (மார்வாடிகள்) நேற்று முன்தினம் மஜகவில் இணைத்து கொண்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு எதிர்வரும் (05/01/2018) அன்று ஷரியத் சட்டத்தை நிலைநாட்ட நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு கண்டன உரையாற்ற வருகை தரவிருக்கும் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் 200 க்கும் மேற்ப்பட்ட இராஜஸ்தானிகள் (மார்வாடிகள்) இணைய உள்ளது குறிப்பிடத் தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல்_மாவட்டம். 02/01/2018.
உள்ளாட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!
நாகை.ஜன.02., நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமான கருத்து கேட்பு மற்றும் ஆட்சேபணை தெரிவிக்க அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்ளும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) விவசாயிகள் அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_ தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_தெற்கு_மாவட்டம். 02.01.2018
சிறைவாசிகள் விடுதலை அறிவிப்புக்கு நன்றி…! தமிழக முதல்வருடன் தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA சந்திப்பு..!!
சென்னை.ஜன.02., இன்று தமிழக முதல்வர் திரு. எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் அவரின் கீரின்வேஸ் சாலை இல்லத்தில் இன்று காலை11மணியளவில் சந்தித்தனர். அப்போது10ஆண்டுகளை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வது தொடர்பாக தங்களின் கோரிக்கையை ஏற்று, திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இதில் ராஜிவ் படுகொலை வழக்கு கைதிகள், கோவை குண்டு வெடிப்பு கைதிகள், மாவோயிஸம், நெக்ஸ்லைட்டு, தமிழ் தேசியம் தொடர்பான வழக்குகளில்.தண்டனை பெற்ற கைதிகள் ஆகியோரையும் பட்டியலில் இணைத்து விடுதலை செய்ய வேண்டும் என்று 3 MLAக்களும் விரிவாக எடுத்துரைத்தனர். இதில் உள்ள சட்ட சிக்கல்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டல்கள் ஆகியவை குறித்து கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவும், இக்கோரிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாகவும் முதல்வர் கூறினார். மேலும் ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கு 10 கோடி நிதி வழங்கியதற்கும் சி.பா. ஆதித்தனாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை பாடப்புத்தகத்தில் சேர்த்ததற்கும் முத்தலாக் குறித்து தமிழக
மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்…!
புதுகை. ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அறந்தாங்கி வர்த்தகர் சங்க அரங்கில் மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட வர்த்தகரணி செயலாளர் ஜலில் அப்பாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் முஹம்மது காலித், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஷாஜஹான், அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப், அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் அப்துல் ரஜாக், அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக், அறந்தாங்கி நகர பொருளாளர் அப்துல் கரீம், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் சைய்யது தாவூத், திருவரங்குளம் ஒன்றிய பெர்ருளாளர் முகமது அப்துல்லாஹ், கீரமங்களம் நகர செயலாளர் முகமது புர்கான், கீரமங்களம் நகர பொருளாளர் இராஜேந்திரன், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் சைய்யது அபுதாஹிர், அவுடையார் கோவில் ஒன்றிய பொருளாளர்