நெல்லை.அக்.23., இன்று கந்து வட்டி கொடுமையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் #தீ வைத்து கொளுத்தி கொண்டனர். இச்சம்பவம் அறிந்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீயில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தார்.
அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா
நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், விவசாயிகள் அணிச் செயலாளர் நாகை முபாரக், நெல்லை மாவட்ட செயலாளர் கலீல், பொருளாளர் சேக், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் வாஹித், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் வாஸீம் முபாரக், மேலப்பாளையம் நிர்வாகி மீரான் மெய்தீன் ஆகியோர் உடன் சென்றனர்.
மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை பார்த்து சகிக்க முடியாமல் கண் கலங்கினர். மருத்துவமனை டீன் அவர்களையும்,மருத்துவர்களையும்,செவிலியர்களையும் சந்தித்து தீவிர சிகிச்சை அளிக்கும்படி கோரினர்.
பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களை சந்தித்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்.? என்று விளக்கம் கேட்டார்.
பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், இச்சம்பவத்திற்கு முன்னர் இக்குடும்பத்தினர் ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் கந்து வட்டி கொடுமைக்கு எதிராக பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது தான் இதற்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினார்.
இம்மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமைகள் தலை விரித்தாடுவதால் காவல் நிலையத்தில் கந்துவட்டி குறித்து வந்துள்ள புகார்கள் மீது காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும் என்றார்.
மாலை 4 மணியளவில் தீக்குளித்த நால்வரில் தாயும்,மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் வந்ததும், அவர்களுக்கு மஜகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்
23_10_17