கோவையில் தொற்றுநோய் பாதிப்பு அபாயம்..! மாநகராட்சி அதிகாரிகளிடம் மஜக முறையீடு..!!

image

image

image

கோவை.அக்.23., கோவை மாநகராட்சிக்குட்பட்ட 75வது வார்டு பூங்கா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

உடனடியாக மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் A.k.முஹம்மது சலீம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் மஸ்ஜித் இக்லாஸ் பள்ளி நிர்வாகிகள் முபாரக், , சமீர், சித்திக் மற்றும் மஸ்ஜிதுல் ஹூதா நிர்வாகிகள் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து சுமார் 1டன் குப்பைகளை அகற்றினர்.

மேலும் இந்த பகுதியின் வழியாக சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் செல்வதால் குப்பைகள் தேங்காமல் அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

மேலும் அதிகமான புதிய குப்பை பெட்டிகளும் வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது, கோரிக்கைகள்அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளித்தனர்.

மேலும் பொது மக்களின் நலனுக்காக விழிப்புணர்வு பதாகைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
23.10.17