சென்னை.ஜூன்.18., வட சென்னை மாவட்டம் 39 வது வட்டம் செரியன் நகர் பகுதியில் மஜகவின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி கடந்த 16-06-2017 அன்று சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மார்க்க அறிஞர் மவ்லவி அலிம் அல் புஹாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். பகுதி நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 250 க்கும் மேறபட்டோர் பங்குகொண்டனர். தகவல் இஸ்லாமிய கலாச்சார பேரவை வட சென்னை. 17.06.2017
Month:
கும்பகோணத்தில் மஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…பொதுச்செயலாளர் பங்கேற்பு…
குடந்தை.ஜூன்.17., தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி குடந்தை தாவூத் மஹாலில் மாவட்ட செயலாளர் சேக்தாவூத் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், ராசுதீன், மாநில வர்த்தக அணி செயளாலர் N.E.M யூசுப் ராஜா, தலைமை கழக பேச்சாளர் காதர் பாட்சா, மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், மாவட்ட IKP செயலாளர் அல்லாபக்ஸ், நகர செயலாளர் ஆசாத், தகவல் தொழில்நுட்ப அணி செயலளார் குடந்தை முஹம்மது ரியாஜ் மற்றும் மாவட்ட, அணி , ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர் அதிமுக சார்பில் நகர செயலளார் இராம.இராமநாதன் Ex MLA மற்றும் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனித நேய ஜனநாயக கட்சி. தஞ்சை வடக்கு. #MJK_IT_WING 17.06.2017
குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தி பெருநாளை கொண்டாடுவோம்…!!!
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணைய தள பதிவு) ஈதுல் ஃபித்ர் எனும் ரம்ஜான் பண்டிகையை எதிர் நொக்கி முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். பண்டிகை என்பதே மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான். அன்று கவலைகள், கோபங்கள், தவறான எண்ணங்கள் ஆகியவற்றை மறந்து வாழ்த்துக்களை பரிமாரிக் கொள்கின்றோம். ஆனால் பண்டிகை என்றாலே குழந்தைகளும், சிறுவர், சிறுமியர்களும் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஒரு வாரத்திற்கு முன்பாகவே கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள். எனவே ஏழை குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு புத்தாடைகளை வழங்குவதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை, பண்டிகைகளின் நோக்கத்தை அடைய முடியும். இதை எல்லா மதத்தினரும் அவர் அவர் பண்டிகைகளின் போது செய்ய வேண்டும். அந்த வகையில் எதிர்வரும் நோன்பு பெருநாளைக்கு ஏழை குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு புத்தாடைகளை வழங்க வசதி உள்ளவர்கள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். முதலில் உறவினர்களில் உள்ள குழந்தைகளுக்கு முன்உரிமை கொடுக்க வேண்டும் பிறகு நமது வீதிகளிளும், நமது குடியிருப்பு பகுதிகளில் வாழும் குழந்தைகளை அடையாளம் கண்டு கொடுக்கலாம். இந்த மனித நேய பணியில் ஈடுபடும்போது குழந்தைகளின் சுயமரியாதை, அவர்களின் குடும்பங்களின் கண்ணியம் ஆகியவை பாதிக்கபடாமல் வழங்கப்பட வேண்டும். குழந்தைகளின் வயதையும்,ஆடை அளவுகளையும்
பஹ்ரைனில் மண்டல மஜக சார்பில் பெருஞ்சிறப்போடு நடந்தேறிய மதநல்லிணக்க (இப்தார்) நோன்பு துறப்பு !
பஹ்ரைன்.ஜூன்.17., மதநல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்கிற சீரிய நோக்கில் புனித ரமலான் மாதத்தில் அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து இப்தார் விருந்து கொடுக்க வேண்டும் என்ற பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி.MLA., அவர்களின் வழிகாட்டுதலின் படி மிகுந்த எழுச்சியோடு நிகழ்ச்சி நேற்று முன்தினம் 15-06-2017 வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தது. அரங்கமே நிறைந்து இடநெருக்கடி ஏற்படும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம், பெரும்பகுதி இஸ்லாமியரல்லாத மக்கள் கலந்து கொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார்கள். தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் . பாசிசத்தின் பேராபத்து சூழ்ந்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி காலத்தின் கட்டாயம் என்று எல்லோரும் பாராட்டி மகிழ்ந்தனர். பஹ்ரைன் மண்டல மனிதநேய ஜனநாயக கட்சிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நடைபெறும் முதல் நிகழ்ச்சியே இவ்வளவு பிரமாண்டமாக நடந்தேறியது என சக தோழர்களுக்கு புதிய உற்சாகத்தை தந்திருக்கிறது. மதவெறி மாயட்டும் ! மதநல்லிணக்கம் தழைக்கட்டும் !! தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி பஹ்ரைன் மண்டலம் #MJK_IT_WING 16-07-2017
நிலா நிலா பாடலில் திரிவு செய்யப்பட்ட வரிகளில் திருத்தம் தேவை .! சட்டசபையில் ம.ஜ.க பொதுச் செயலாளர் கோரிக்கை…
(கடந்த 15.06.17 அன்று கல்வி மானிய கோரிக்கையில் மஜக பொதுச் செயலாளர் சட்டப்பேரவையில் பேசிய பாகம்-2) நிலா,நிலா ஓடி வா... என்ற பாடல் நமது மழலைகளுக்கு பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதில் கடைசியாக வரியாக… "நடு வீட்டில் வைக்க வா நல்ல துதி செய்ய வா…" என்று இருந்தது. தற்போது LKG ,UKG தமிழ்பாட புத்தகம் ராயபேட்டையில் உள்ள சம்பா பதிப்பகம் வெளியிட்டுள்ளது அதில்… "ஈசன் முன்னால் வைக்கவா… இனிய துதி செய்ய வா… என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈசான் என்றால் சிவன் என்று பொருள்.எனது தொப்புள் கொடி உறவுகளான இந்து சமுதாய மக்கள் வணங்கும் தெய்வங்களில் ஒன்று சிவன்.நானும் அவர்களின் நம்பிக்கையை , வழிபாட்டை மதிக்கிறேன். ஆனால் , ஒரு பாடப்புத்தகத்தில் ஒரு பொதுப்பாடத்தில் சிவன் , அல்லாஹ் , ஏசு என்று எந்த கடவுள்களின் பெயரும் வேண்டாம். எனவே இதில் அரசு தலையிட்டு மீண்டும் பழையபடி அதை மாற்றி எழுதவும் , பள்ளிக்கூடங்களில் அதன்படி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கவும் ஏற்பாடு செய்யும்படி தமிழக அரசை கெட்டுக்கொள்கிறேன். தகவல் தொகுப்பு: மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING 17.06.2017