குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தி பெருநாளை கொண்டாடுவோம்…!!!

image

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணைய தள பதிவு)

ஈதுல் ஃபித்ர் எனும் ரம்ஜான் பண்டிகையை எதிர் நொக்கி முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். பண்டிகை என்பதே மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான். அன்று கவலைகள், கோபங்கள், தவறான எண்ணங்கள் ஆகியவற்றை மறந்து வாழ்த்துக்களை பரிமாரிக் கொள்கின்றோம்.

ஆனால் பண்டிகை என்றாலே குழந்தைகளும், சிறுவர், சிறுமியர்களும் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஒரு வாரத்திற்கு முன்பாகவே கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள். எனவே ஏழை குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு புத்தாடைகளை வழங்குவதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை, பண்டிகைகளின் நோக்கத்தை அடைய முடியும்.

இதை எல்லா மதத்தினரும் அவர் அவர் பண்டிகைகளின் போது செய்ய வேண்டும்.

அந்த வகையில் எதிர்வரும் நோன்பு பெருநாளைக்கு ஏழை குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு புத்தாடைகளை வழங்க வசதி உள்ளவர்கள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

முதலில் உறவினர்களில் உள்ள குழந்தைகளுக்கு முன்உரிமை கொடுக்க வேண்டும் பிறகு நமது வீதிகளிளும், நமது குடியிருப்பு பகுதிகளில் வாழும் குழந்தைகளை அடையாளம் கண்டு கொடுக்கலாம்.

இந்த மனித நேய பணியில் ஈடுபடும்போது குழந்தைகளின் சுயமரியாதை, அவர்களின் குடும்பங்களின் கண்ணியம் ஆகியவை பாதிக்கபடாமல் வழங்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் வயதையும்,ஆடை அளவுகளையும் கேட்டறிந்து நீங்களே வாங்கி கொடுக்கலாம் அல்லது அதற்குரிய தொகையை அவர்களின் பெற்றோர்களிடம் கொடுத்து வாங்கி கொடுக்க சொல்லலாம்.

பெருநாள் அன்று நாம் நமது பிள்ளைகளை புத்தாடை அணிய வைத்து பள்ளிவாசல்களுக்கு அழைத்து செல்லும்போது, ஏழை வீட்டு பிள்ளைகளும் புத்தாடைகளோடு வருவதை கண்டு மகிழ்ச்சி அடையவேண்டும் அதுதான் நமக்கு பெருநாள் கொண்டாட்டம்!!!

இவண்;
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
17/06/2017