அமீரகம்.ஜன.14., அபுதாபி மண்டல மனிதநேய கலாச்சார பேரவை (MKP) நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி.முஹம்மது தையூப் அவர்கள் தலைமையில் கடந்த 12-01-2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் எதிர்வரும் 26-01-2018 அன்று அபுதாபி மண்டல பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது எனவும், தாயகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து பிரம்மாண்ட பொதுநிகழ்ச்சியை நடத்துவது என்றும், மாதம் ஒருமுறை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தகவல் : #MKP_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு #மனிதநேய_கலாச்சார_பேரவை #ஐக்கிய_அரபு_அமீரகம் 12.01.18
வளைகுடா
வளைகுடா
MKP கத்தார் மண்டல ஆலோசனை கூட்டம்..!
கத்தார்.ஜன.14., மனிதநேய கலாச்சார பேரைவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் (12.01.18) நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ், மண்டல துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின், PRO.வாஜீத் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் பிற கட்சிகளில் இருந்து பல இளைஞர்கள் தங்களை மஜகாவில் இணைத்துக்கொண்டார்கள். இணைப்பு நிகழ்ச்சிக்கு, பின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர் வரும் பிப்ரவரி-15 அன்று கத்தாரில் MKP சார்பில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட மாநாட்டிற்கு தலைப்பு “திருப்புமுனை மாநாடு” என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கத்தார் மண்டல MKP பணிகளை துரிதப்படுத்தி, போர்கால அடிப்படையில் செயல்பட சகோதரர் மீசல் சையத் கனி அவர்களுக்கு மக்கள் தொடர்பு செயலாளராக நியமனம் செய்வது என மண்டல செயலாளர் முன் மொழிந்ததை மண்டல நிர்வாகிகள் அனைவரும் வழிமொழிந்தனர். தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 12.01.2018
IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
தம்மாம்.ஜன.07., இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP தமாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த (05.01.2018) வெள்ளிக்கிழமை அன்று தம்மாமில் உள்ள ஹாலிடே ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. மண்டல மூத்த நிர்வாகி ஹாஜராஜ் முகைதின் அவர்கள் தலைமையில், செய்யது ஹமீது அவர்கள் முன்னிலையிலும் வகித்தார்கள். மண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் மண்டல செயல்பாடுகள் குறித்தும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், அதற்கு தமிழகத்தில் கேரளாவை போன்று தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் அப்படி அமைந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பேசினார்கள். அடுத்து பேசிய மண்டல பொருளாளர் ஹஜ் முஹம்மது அவர்கள் மண்டல களப்பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும், விளக்கமாக பேசினார்கள். அதை தொடந்து கிளை நிர்வாகிகள் கருத்துகள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் மண்டல செயலாளர் விடுமுறையில் தாயகம் செல்வதால் இந்த கூட்டத்தில் மண்டல துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் தற்காலிக மண்டல பொருப்பாளராக தேர்வு செய்தார்கள். உதவி பொறுப்பாளர்களாக அஜீஸ் பாய் அவர்களும் முகம்மது இலியாஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டார்கள். தீர்மானம். தமிழக சட்டப்பேரவையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க
கத்தார் மண்டலம் MKPயின் மேலும் ஒரு புதிய கிளை உதயம்!
மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டலம் சார்பாக கடந்த 03/01/2018 அன்று மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ் தலைமையில் நஜ்மாவில் (NAJMA) மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை துவங்கப்பட்டது. இதில் கீழ்கண்ட கிளை நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். கிளைச் செயலாளர்: மணிகண்டன் வத்தலகுண்டு +97430339218 கிளை பொருளாளர் :- முத்தரசன் பெரம்பலூர் +97470424959 கிளை துணை செயலாளர்கள்:- ஆனந்த் பெரம்பலூர் +97470281855 தினேஷ் கோவை +9746660929 K. பாலமுருகன் வத்தலகுண்டு +97430339218 நிர்வாகிகள் ஹபீப் தஞ்சாவூர் +97431208208 குமார் பெரியகுளம் +97466819030 ஆகியோர் புதிய கிளை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 04.01.2018
MKP நியமன அறிவிப்பு!
மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) கத்தார் மண்டல ஒருங்கிணைப்பாளராக நெல்லை KST.அப்துல் அஜீஸ் (+974 7048 3054) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். அவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவன்: #M_தமிமுன்_அன்சாரி பொதுச்செயலாளர் 01.01.2018