தம்மாம்.ஜன.07., இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP தமாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த (05.01.2018) வெள்ளிக்கிழமை அன்று தம்மாமில் உள்ள ஹாலிடே ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது.
மண்டல மூத்த நிர்வாகி ஹாஜராஜ் முகைதின் அவர்கள் தலைமையில், செய்யது ஹமீது அவர்கள் முன்னிலையிலும் வகித்தார்கள்.
மண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் மண்டல செயல்பாடுகள் குறித்தும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், அதற்கு தமிழகத்தில் கேரளாவை போன்று தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் அப்படி அமைந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பேசினார்கள்.
அடுத்து பேசிய மண்டல பொருளாளர் ஹஜ் முஹம்மது அவர்கள் மண்டல களப்பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும், விளக்கமாக பேசினார்கள். அதை தொடந்து கிளை நிர்வாகிகள் கருத்துகள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் மண்டல செயலாளர் விடுமுறையில் தாயகம் செல்வதால் இந்த கூட்டத்தில் மண்டல துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் தற்காலிக மண்டல பொருப்பாளராக தேர்வு செய்தார்கள்.
உதவி பொறுப்பாளர்களாக அஜீஸ் பாய் அவர்களும் முகம்மது இலியாஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டார்கள்.
தீர்மானம்.
தமிழக சட்டப்பேரவையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துமாறு மஜகவின் பொதுச் செயலாளரும் சமுதாயத்தின் இளம் தலைவரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
தீர்மானத்தை அடுத்து கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தகவல்;
#IKP_IT_WING
#தம்மாம்_மண்டலம்
06.01.2017