( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) அன்பும், சகோதரத்துவமும், ஈகை குணமும் பூத்துக் குலுங்கும் இனிய மாதம்தான் ரமலான்.! இறைவனின் அருள் பெற வேண்டி, மாதம் முழுக்க ஏறத்தாழ 14 மணி நேரம் தொடர்ச்சியாக, தண்ணீர் கூட அருந்தாமல், நோன்பினை கடைப்பிடித்து, அதன் நிறைவாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது ஈதுள் ஃபித்ர் எனும் ரமலான் பண்டிகை.! மகிழ்ச்சியில் மிகப் பெரிய மகிழ்ச்சி என்னவெனில், இல்லாதவர்களுக்கு செல்வங்களை கொடுத்து மகிழ்வது தான். அதனால் தான் ரமலான் பண்டிகையை "ஈகைத் திருநாள்" என வர்ணிக்கிறார்கள். பசியின் கொடுமையை உணர்தல், செல்வங்களை பகிர்ந்து கொடுத்தல், சகோதரத்துவத்தை வளர்த்தல், அன்பினை பகிர்தல் என ஒரு பண்டிகை மனித நேயத்தை வலியுறுத்துகிறது என்றால் அது ரமலான் பண்டிகைதான் என்பது ஒரு சிறப்பாகும்.! இந்நன்னாளில், மனிதநேயம் ஓங்கவும், உரிமைப் போராட்டங்கள் வெல்லவும், அன்பும்-அமைதியும் செழிக்கவும், சமூக நீதி நிலைபெறவும் உறுதியேற்போம்.! அனைவருக்கும் மனம் நிறைந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 14.06.2018
வளைகுடா
வளைகுடா
MKP தலைமையக நியமன அறிவிப்பு..!
#மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) கத்தார் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் (PRS) சென்னை A. கஃதீர் அஹ்மத் +974 5529 0327 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 13.06.18
MKP தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல ஆலோசகராக புதுமடம் முகம்மது பைசல் (+974 5085 4704) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 12.06.18
MKP தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல ஒருங்கிணைப்பாளராக கீழக்கரை ஹூசைன் அலைபேசி : +974 77569163 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 11.06.18
IKP ரியாத் மண்டலம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!
ரியாத்.ஜூன்.09., சவுதிஅரேபியா ரியாத் மண்டலம் #இஸ்லாமிய _கலாச்சார_பேரவை-யின் சார்பில் EXIT-8 வெல்கம் உணவகத்தில் நேற்று (08/06/2018) வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் #இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி #IKP மண்டல பொருளாலர் திருச்சி ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் IKP முன்னால் தலைமை ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை செயலார் M.நிவாஜிதீன், KSATS - மண்டல செயலாளர் தஞ்சை அலி, முன்னால் மண்டல தலைவர் அடியற்க்கை அலி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #IKP_IT_WING #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை_ரியாத்_மண்டலம்