நவ.18,
மறைந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தமிழக தலைவர் முகம்மது இஸ்மாயில் அவர்களின் உடல் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இன்று மாலை 4.30 அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., துணைப் பொதுச் செயலாளர் மண்டலம்.ஜெய்னுலாபுதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் ஆகியோர் 10 நிமிடங்கள் தாமதமாக அங்கு வந்து சேர்ந்தனர்.
பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று பிரார்த்தித்து விட்டு, அவரது வீட்டுக்கு சென்று உறவினர்களிடம் ஆறுதல் கூறினர்.
அவருக்கு கவர்னர் பதவியை ஜனதா தள தலைமை தர முன்வந்த போதும் அதை ஏற்க மறுத்து பிறருக்கு வழி விட்டதும், கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து சென்றதும் மறக்க முடியாத ஆச்சர்யமான நிகழ்வுகள் என அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் கட்சியினரிடம் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பகிர்ந்துக் கொண்டார்.
இம்மாவட்டத்தில் மூன்று முக்கிய மதத்தினரை அரவணைத்து வழி நடத்தி சென்ற ‘சமாதான புறா’ அவர் என்றும் அவரது கல்வி சேவைகளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் என்றும் நினைவு கூறுவர் என்றும் கூறினார்.
மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல், குமரி மாவட்ட செயலாளர் ஹபீஸ், நெல்லை மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா, மற்றும் குமரி மாவட்ட நிர்வாகிகளும் அப்போது உடன் இருந்தனர்.
பிரின்ஸ் MLA, மனோ தங்கராஜ் MLA, ராஜேஷ் MLA, தெஹ்லான் பாகவி, இரவிபுதூர் காதர் மொய்தீன், கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் அப்துல் லத்தீப், நாடார் மகாஜன சங்க தலைவர் ஜார்ஜ் பொன்னையா, ஜனதா தள நிர்வாகி ஜான் கிறிஸ்டோபர் ஆகியோரும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, CPI, CPM உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் வருகை தந்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் தேவகெளடா அவர்கள், அவரது குடும்பத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் மஜக மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சாதிக், முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர் கான், பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர் அஷ்ரப் அலி, மனிதஉரிமைகள் பாதுகாப்பு அணி செயலாளர் பைசல், இம்ரான், திருவை கிளை பொருளாளர் மன்சில், செயல்வீரர்கள் முஜிப் ரகுமான், சஜீர் ஆகியோரும் உடனிருந்தனர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்.
18.11.2020