ரியாத்.மே.11., இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) ரியாத் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நசிரியா பகுதியில் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் அவர்கள் தலைமையில் இன்று (11-05-2018) காலை 8:00 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னால் தலைமை ஆலோசகர் ஜனாப் நாகை என்.எஸ்.ஹமீது, துணை செயலாளர் S.முஹம்மது நிவாஜிதீன், மருத்துவ அணி S.யூசுப்தீன், மண்டல ஒருங்கிணைப்பாளர் J.சாதிக் பாட்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் எதிர்வரும் ரமளான் மாத இஃப்தார் நிகழ்ச்சிகள் சம்மந்தமாக ஆலோசிகப்பட்டது. தகவல்; #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத்_மண்டலம் #IKP_IT_WING 11.05.2018
வளைகுடா
வளைகுடா
மஜக 3ஆம் ஆண்டு துவக்க விழா.! கத்தாரில் MKP சனாயா மண்டலம் நடத்திய இரத்த தான முகாம்…!!
கத்தார்.ஏப்.23., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மூன்றாம் ஆண்டு துவாக்கத்தை முன்னிட்டு அதன் வெளிநாடுகள் பிரிவான #மனிதநேய _கலாச்சார_பேரவை (MKP) கத்தார் சனாயா மண்டலம் #இரத்த_தான முகாம் சார்பில் நடைபெற்றது. இரத்த தான முகாமை #கத்தார் அலோசகர் கீழக்கரை ஹூசைன் துவக்கிவைத்தார். சனாயா மண்டல செயலாளர் நூர் முஹம்மத் தலைமை தாங்கினார். இதில் சனாயா மண்டல பொருளாளர் காட்டுமன்னார் கோயில் ஓளியுள்ளா, துஹைல் மண்டல செயலாளர் ஹாஜ் முஹம்மத், தோஹா மண்டல செயலாளர் பொதக்குடி புர்ஹானுதீன், சனாயா மண்டல துணை செயலாளர் முத்துப்பேட்டை யூனுஸ், அணி Al million நிர்வாகிகளாகிய திருமங்களம் சுந்தர்., வீரபாண்டி, மேலும் கத்தார் செயலாளர் உத்தமபாளையம் உவைஸ், கத்தார் பொருளாளர் ஆயங்குடி யாசீன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல அஜீஸ், துணை செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன், புதுமடம் பைஸல், மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பல தோழமைச்சகோதரர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மிகவும் ஆர்வத்துடன் இரத்ததானம் கொடுத்தனர். தகவல் : #MKP_IT_WING #MKP_சனாயா_மண்டலம் #கத்தார்_மனிதநேய_கலாச்சார_பேரவை
மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம்..!
அமீரகம்.ஏப்.22., மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) அமீரக செயற்குழு கூட்டம் இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த 20-04-2018 அன்று ஜெபல்அலியில் அமீரக துணை செயலாளர் சகோ Y.அப்துல் ரெஜாக் அவர்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறியது. கூட்டத்திற்கு அமீரக செயலாளர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் சகோ. அதிரை அஸ்ரப் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அமைப்பின் எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இறைவன் நாடினால் எதிர்வரும் ரமலானில் மஜக பொது செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும், ரமலானில் பிஃத்ரா, சதக்கா, ஜகாத் வசூல் செய்வது குறித்தும், தலைமை நிர்வாகிகளை (தாயிகள்) அழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியாக அமீரக துணை செயலாளர் சகோ.நாச்சிகுளம் A.அசாலி அஹ்மத் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவேறியது. தகவல்: #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING_UAE #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை ஐக்கிய அரபு அமீரகம்.
கத்தார் QISF ஏற்படு கூட்டத்தில் MKP நிர்வாகிகள் பங்கேற்பு..!
தோஹா.ஜன.27., கத்தார் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகளுக்கு கடந்த 26.01.2018 அன்று SDPI கட்சியின் கத்தார் மண்டல பிரிவான QISF ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்திருந்தது. அழைப்பை ஏற்று மஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் SDPI கட்சியின் சிறப்பு பேச்சாளராக மாநில செயற்குழு உறுப்பினர் கோவை அபு தாஹிர் அவர்கள் வருகை புரிந்தார்கள். அவரை வரவேற்கும் வகையில் நட்பின் அடிப்படையில் கத்தார் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பாக மண்டல செயலாளர் உவைஸ், ஒருஙகிணைபபாளர் KST அப்துல் அஜீஸ் , ஆலோசகர் ஹுசைன், மக்கள் தொடர்பு செய்யது கனி, தகவல் தொடர்பு செயலாளர் அப்துல் ரஜ்ஜாக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அப்துல் அஜிஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்து, எதிர்வரும் 16.02.2018 அன்று கத்தார் மஜக சார்பாக நடக்கவிருக்கும் திருப்புமுனை மாநாட்டிற்கு அழைப்பும் தரப்பட்டது. தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை. #கத்தார் மண்டலம்.
கத்தாரில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்..! குவைத் மண்டல MKP நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை..!! கத்தார் MKP நிர்வாகிகள் வரவேற்று உபசரிப்பு..!!
கத்தாரில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்..! குவைத் மண்டல MKP நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை..!! கத்தார் MKP நிர்வாகிகள் வரவேற்று உபசரிப்பு..!! தோஹா.ஜன.22., கத்தார் நாட்டில் நடைபெறும் தொழில் முதலீட்டார்கள் கருத்தரங்கம் மற்றும் கத்தார் நாட்டில் தமிழர்களின் தொழில் முன்னேற்றம் போன்ற விசயங்களில் கலந்துகொள்ள குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை செயலாளர் முத்துகாப்பட்டி. ஹாஜா மைதீன் அவர்கள் வெல்டன் ரியல் புரோமோடர்ஸ் நிறுவனர் முகம்மது கவுஸ் அவர்கள், வேல்டு ஹலால் டெவலப்மெண்ட் சேர்மன் முகம்மது ஜின்னா அவர்கள் ஆகியோர் வருகைதந்தனர். அவர்களுடன் கத்தார் MKP மண்டல செயலாளர் முஹம்மது உவைஸ் , ஒருங்கிணைப்பாளர் KST அப்துல் அஜிஸ், மண்டல ஆலோசகர் கீழக்கரை ஹுசைன் , வர்த்தகர் அணி செயலாளர் ஷேய்க் மொஹிதீன், மக்கள் தொடர்பு செயலாளர் செய்யது கனி ஆகியோர் மரியாதையை நிமித்தமா சந்தித்து கலந்துயுரை யாடினார். இந்த சந்திப்பில் பல்வேறு தொழில் முன்னேற்ற விஷயங்கள் பரிமாறப்பட்டன. பிப்ரவரி 16 இல் கத்தார் MKPயினர் நடத்தும் "திருப்புமுனை மாநாட்டுக்கு'' அழைப்பு விடுக்கப்பட்டு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இறுதியாக MKP நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்த விருந்தில் அனைவரும் கலந்துகொண்டனர். தகவல்: #MKP_ஊடக_பிரிவு #MKP_கத்தார்_மண்டலம்