புது தில்லி. ஏப்.01., இன்று காலை டெல்லி வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் 19ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்தார். அவரை போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் தோழர் அய்யாக்கண்ணு, தோழர் தினேஷ் ஆகியோர் வரவேற்று விவசாயிகளிடம் உற்சாகமாக அறிமுகப்படுத்தினர். அதன் பிறகு விவசாயிகளுக்கு மத்தியில் பொதுச்செயலாளர் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். விவசாயிகள் அவரது உரையை வரவேற்று கைத்தட்டி தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். அதன் பிறகு பொதுச்செயலாளரிடம் விரிவாக பேசிய விவசாயிகள், இவ்விசயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசுக்கு நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்றும், எங்களுடைய இந்த பிரச்சனைகளை, போராட்ட உணர்வுகளை முதல்வரின் தனிப்பட்ட கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதற்கு பதில் அளித்த பொதுச்செயலாளர் அவர்கள் உடனடியாக இன்று இரவே முதல்வருடைய தனி கவனத்திற்கு நேரடியாக எடுத்து செல்வதாக உறுதி அளித்தார். பொதுச் செயலாளருடைய இந்த முயற்ச்சிக்கு விவசாயிகள் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து மூன்று மணிநேரம் அவர்களோடு களத்தில் இருந்த பொதுச் செயலாளர் அவர்கள், அதன்பிறகு அவர்களுடைய
தமிழகம்
தமிழகம்
ஆவடியில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்…
சென்னை,ஏப்.01., சென்னை ஆவடியில் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று மாவீரன் திப்பு சுல்தான் திடல் அருகில் நடைபெற்றது. மஜக நகர செயலாளர் ச.சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில், நகர பொருளாளர் ச.நாகூர் மீரான் அவர்கள் முன்னிலையில், துணை செயலாளர் டி.தேவகாந்தி (எ) பாபு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நகர துணை செயளாலர் லி.சுல்தான் இஸ்ஹாக் தொகுப்புரை நிகழ்த்தினார். மாநில பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும், மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மத்திய மோடி அரசை கண்டித்து தோலுரித்து வீரமிகு எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். இதில் மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, புதுமடம் அனிஸ், மாநில இளைஞர் அணி செயலாளர் J.ஷமிம் அஹமது, மாநில செயற்குழு உறுப்பினர் பூவை அப்துல் காதர் ஆகிய மாநில நிர்வாகிகளுடன், திருவள்ளுவர் மே மாவட்ட செயலாளர் A.அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் செய்யது இஸ்மாயில், துணை செயலாளர்கள் பக்ருதீன், பாஸ்கர், முஹம்மது, இளைஞர் அணி செயலாளர் செய்யது அபுதாஹிர், வர்த்தக அணி
நாளை டெல்லி சென்று போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
சென்னை.மார்ச்.31., டெல்லியில் கடந்த 18ஆவது நாட்களாக பல்வேரு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நாளை 01/04/2017 சனிக்கிழமை டெல்லி புறப்படுகிறார். காலை புறப்பட்டு செல்லும் அவர் நாளை மதியம் ஜந்தர் மந்தரில் விவசாயிகளை சந்திக்கிறார். தகவல் : தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தலைமையகம்.
சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு !
#தமிழகத்தில்_அலிகார்_பல்கலைக்கழகம் #சென்னையில்_வக்ஃபு_இடத்தில்_பெண்களுக்கு_விடுதி #நாகூரில்_வக்ஃபு_வாரிய_கல்லூரி சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு ! தமிழக சட்டமன்றத்தில் 22.03.2017 அன்று மஜக பொதுச் செயலாளரும் , நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA சிறுபான்மை சமூக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் . அப்போது முதல்வர் ,நிதியமைச்சர் உள்ளிட்டோரும் அவையில் இருந்தனர் . (பகுதி – 12) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … 2017 - 2018 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை சமூக மக்களுக்காக புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை . இதை நான் நிதியமைச்சரிடமே நேரில் சுட்டி காட்டினேன். அந்த குறையை போக்குவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு . உ.பி. யில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கிளையை தமிழகத்தில் தொடங்க , வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் இடத்தை தமிழக அரசு வழங்கவேண்டும் . அப்படி தந்தால் அந்த பல்கலைக்கழக கிளையை இங்கு தொடங்க முடியும் . இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் . மேலும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் சென்னையில் வெளியூர்களிலிருந்து வருகை தந்து வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களின் நலனை
புத்துணர்ச்சியோடு நடைபெற்ற கோவை கிணத்துக்கடவு பகுதி மஜக ஆலோசனை கூட்டம்…
img android-uri="content://media/external/images/media/12566" /> கோவை.மார்ச்.30., கோயம்புத்தூர் மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிணத்துக்கடவு பகுதி அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜாபர்அலி தலைமை தாங்கினார், பகுதி பொருளாளர் ஹாருண் ரஷீது, துணை செயலாளர்கள் அக்பர் அலி, அக்பர் கான், இளைஞரணி செயலாளர் இம்தியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எதிர் வரும் 02.04.17 ஞாயிறு அன்று பகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது என்றும், நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்துவது என்றும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 30.03.17