சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

image

#தமிழகத்தில்_அலிகார்_பல்கலைக்கழகம்

#சென்னையில்_வக்ஃபு_இடத்தில்_பெண்களுக்கு_விடுதி

#நாகூரில்_வக்ஃபு_வாரிய_கல்லூரி

சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

தமிழக சட்டமன்றத்தில் 22.03.2017 அன்று மஜக பொதுச் செயலாளரும் ,  நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA சிறுபான்மை சமூக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் .

அப்போது முதல்வர் ,நிதியமைச்சர் உள்ளிட்டோரும் அவையில் இருந்தனர் .

(பகுதி – 12)

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே …

2017 – 2018 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை சமூக மக்களுக்காக புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை . இதை நான் நிதியமைச்சரிடமே நேரில் சுட்டி காட்டினேன். அந்த குறையை போக்குவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு .

உ.பி. யில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கிளையை தமிழகத்தில் தொடங்க , வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் இடத்தை தமிழக அரசு வழங்கவேண்டும் . அப்படி தந்தால் அந்த பல்கலைக்கழக கிளையை இங்கு தொடங்க முடியும் . இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் .

மேலும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் சென்னையில் வெளியூர்களிலிருந்து வருகை தந்து வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு பெண்கள் விடுதியை கட்டித்தர வேண்டும் .

அதுபோல எனது தொகுதிக்கு உட்பட்ட நாகூரில் வக்ஃபு இடத்தில் வக்ஃபு வாரியம் சார்பில் ஒரு பெண்கள் கல்லூரியை திறக்க வேண்டும் .

இவ்வாறு M.தமிமுன் அன்சாரி MLA பேசினார் . மேலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்படுவது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் , சச்சார் கமிட்டி பரிந்துரை குறித்தும் பேசினார் .

அவரது உரைக்கு நிதியமைச்சர் உட்பட 4 அமைச்சர்கள் பதிலளித்தனர் .

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மூன்று கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்றார் .

சபை முடிந்தபிறகு அமைச்சர் நிலோபர் கபீலையும் , M.தமிமுன் அன்சாரி MLA அவர்களையும் அழைத்துப் பேசிய நிதியமைச்சர் அவர்கள் , இம்மூன்று கோரிக்கைகள் குறித்தும் தொடர்ந்து முயற்சிக்கப்படும் என்றார்.

பிறகு உயர் கல்வி அமைச்சர்  செங்கோட்டையன் அவர்கள் M.தமிமுன் அன்சாரி MLA விடம் அலிகார் பல்கலைக்கழகத்தின் விபரங்களை கேட்டறிந்தார் .

சிறுபான்மை மக்களின் வரலாற்று சிறப்புமிகு கோரிக்கைகளை மஜக தனது கனவு திட்டங்களாக கையிலெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது .

தகவல் :

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
31.03.2017