டெல்லி விவசாய போராட்ட களத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA எழுச்சியுரை…

image

image

image

image

புது தில்லி. ஏப்.01., இன்று காலை டெல்லி வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் 19ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்தார்.

அவரை போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் தோழர் அய்யாக்கண்ணு, தோழர் தினேஷ் ஆகியோர் வரவேற்று விவசாயிகளிடம் உற்சாகமாக அறிமுகப்படுத்தினர்.

அதன் பிறகு விவசாயிகளுக்கு மத்தியில் பொதுச்செயலாளர் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். விவசாயிகள் அவரது உரையை வரவேற்று கைத்தட்டி தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

அதன் பிறகு பொதுச்செயலாளரிடம் விரிவாக பேசிய விவசாயிகள், இவ்விசயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசுக்கு நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்றும், எங்களுடைய இந்த பிரச்சனைகளை, போராட்ட உணர்வுகளை முதல்வரின் தனிப்பட்ட கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதற்கு பதில் அளித்த பொதுச்செயலாளர் அவர்கள் உடனடியாக இன்று இரவே முதல்வருடைய தனி கவனத்திற்கு நேரடியாக எடுத்து செல்வதாக உறுதி அளித்தார்.

பொதுச் செயலாளருடைய இந்த முயற்ச்சிக்கு விவசாயிகள் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து மூன்று மணிநேரம் அவர்களோடு களத்தில் இருந்த பொதுச் செயலாளர் அவர்கள், அதன்பிறகு அவர்களுடைய கோரிக்கைகள் எல்லாம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து விடைப்பெற்றார்.

பொதுச்செயலாளர் வருகையை யொட்டி டில்லியில்லிருந்த பல்வேறு கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்களும், அங்கு பணியாற்ற கூடிய தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களும் போராட்ட களத்திற்கு வந்து நேரில் சந்தித்து, சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்கள் வருகையை அறிந்ததாகவும், தங்கள் வருகை மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
01_04_17