சென்னை.ஏப்ரல்.01., கோவை சசிக்குமார் கொலை வழக்கில் அபுதாஹிர் என்ற அப்பாவி முஸ்லிம் இளைஞரை கைது செய்த கோவை CB CID காவல் துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்ககோரியும், அபுதாஹிரை விடுதலை செய்யக் கோரியும் மஜக பொதுச் செயலாளர் M.தமீமுன் அன்சாரி MLA தலைமையில் கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜி இனாயத்துல்லாஹ்
ராஜா உசேன், மஜக மாநில செயலாளர் கோவை சுல்தான் அமீர், மஜக கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ், SDPI, INTJ மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தகவல்:
தகவல் தொழில் நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
01.04.17