நாகை. ஏப்.03., நாகப்பட்டினத்தில் ரயில்வே மேம்பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2008-ல் கட்டப்பட்டு 2013-ல் திறக்கப்பட்ட இப்பாலத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொண்டார். இன்று காலை (03-04-2017) நேரில் அதிகாரிகள், பொறியியல் வல்லுனர்களுடன் பாலத்தை MLA அவர்கள் பார்வையிட்டார். ஒரு மாதத்தில் பாலம் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்து தொடங்கும் என்று MLA தெரிவித்தார். இதுகுறித்து மேலதிகாரிகளுடன் பேசியிருப்பதாகவும் கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 03-04-2017.
தமிழகம்
தமிழகம்
நாகை நகரில் தொகுதி மக்களை சந்தித்து MLA குறைக் கேட்பு…
நாகை.ஏப்.03., நாகப்பட்டினத்தில் நேற்று 02-04-17 சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நகரின் முக்கிய வீதிகளுக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கடைத்தெரு,ஆசாத் மார்க்கட், நூல்கடைத்தெரு, யாஹுசைன் பள்ளித்தெரு, நீலா கீழ வீதி,புத்தூர் ரவுண்டானா,ஆகிய நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று தொகுதி மக்களிடம் நேரில் கலந்துரையாடினார். வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்,சிறுகடை வியாபாரிகள், பாதசாரிகள்,ஷாப்பிங் வந்த பொதுமக்ககள், தொழிலாளர்கள் என பலரையும் சந்தித்து பேசினார். அவர்கள் சுட்டிக்காட்டிய விசயங்களை குறிப்பெடுத்துக் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் MLA அவர்கள் கூறினார்கள். MLA அவர்களை நாகை நகர மக்கள் ஆவலுடன் வரவேற்று,கை குலுக்கி உரையாடியது குறிப்பிடத்தக்கது. இவண், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 02_04_17
எழுச்சியோடு நடைபெற்ற கோவை மஜக கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…
கோவை.ஏப்:02., கோயம்புத்தூர் மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR. பதுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக் அவர்கள் மஜக கடந்து வந்த பாதைகளை நினைவுபடுத்தி உரையாற்றி மக்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், பகுதி பொருளாளர் ஹாருண் ரஷீது, துணைசெயலாளர் அக்பர்அலி மற்றும் கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு. * கிணத்துக்கடவு பகுதி முழுவதும் கொடியேற்றுவிழா நடத்துவது. * பகுதியின் சார்பாக சுந்தராபுரத்தில் மாநில நிர்வாகிகளை அழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது. * கிளைகளை அதிகப்படுத்துவது. * மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது!!! தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 02.04.17
அறந்தாங்கியில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்..!
புதுகை.ஏப்.02., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி நகரில் 15 இளைஞர்கள் தன்னெழுச்சியாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜலில் அப்பாஸ், ஒலி முகம்மது, நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகர செயலாளர் அப்துல் ஜமீன், நகர பொருளாளர் ஜகுபர்சாதிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பொறியாளர் பாசித் கான் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடந்தது. இணைந்தவர்கள் விபரம்... 1.அப்துல் ஆசிக்ரஹ்மான், 2.ஷாருக் பைசல், 3.முகம்மது ஆசிப், 4.அப்சல் அகமது, 5.முகம்மது யூனுஸ், 6.முகம்மது அப்சல், 7.அப்துல் கலாம் ஆசாத், 8.அர்ஷத் முகம்மது, 9.முகமது ஷாருக்கான், 10.அஜய், 11.ஷேக் இர்பான், 12.முகம்மது அஸ்லாம், 13.ஷாகித் முபாரக், 14.முகம்மது ஆசிக், 15.முகம்மது ஜக்கரியா இளைஞர்கள் அனைவரும் மஜகவில் தங்களை இணைத்து மாவட்ட செயலாளர் முபாரக் அலி அவர்களிடமிருந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டனர். தமிழகம் முழுதும் மஜகவின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் அறிந்து இதுபோல் இளைஞர்கள் ஆர்வமாக தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம். 02.04.2017
நாகை வடக்கு மாவட்ட மஜக செயற்குழு கூட்டம்! மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு!
நாகை. ஏப்.02., நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட பொருளாலர் ஷாஜகான், துணைச் செயலாளர் அபுசாலிஹ், துபை மண்டல துணை செயலாளர் கடலங்குடி ஹர்பின், இளைஞரணி செயலாளர் மிஸ்பா, IT Wing மாவட்ட செயலாளர் ஜெகபர் அலி மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாநில துணைச் செயலாளர் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். வருகின்ற 8 ஆம் தேதி தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது. உறுப்பினர் சேர்க்கையை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்திவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING நாகை வடக்கு மாவட்டம். 02.04.2017