கோவை.ஏப்:02., கோயம்புத்தூர் மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR. பதுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக் அவர்கள் மஜக கடந்து வந்த பாதைகளை நினைவுபடுத்தி உரையாற்றி மக்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், பகுதி பொருளாளர் ஹாருண் ரஷீது, துணைசெயலாளர் அக்பர்அலி மற்றும் கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.
* கிணத்துக்கடவு பகுதி முழுவதும் கொடியேற்றுவிழா நடத்துவது.
* பகுதியின் சார்பாக சுந்தராபுரத்தில் மாநில நிர்வாகிகளை அழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது.
* கிளைகளை அதிகப்படுத்துவது.
* மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது!!!
தகவல்:
தகவல் தொழில் நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
02.04.17