You are here

நாகை நகரில் தொகுதி மக்களை சந்தித்து MLA குறைக் கேட்பு…

image

image

நாகை.ஏப்.03., நாகப்பட்டினத்தில் நேற்று  02-04-17 சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நகரின் முக்கிய வீதிகளுக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கடைத்தெரு,ஆசாத் மார்க்கட், நூல்கடைத்தெரு, யாஹுசைன் பள்ளித்தெரு, நீலா கீழ வீதி,புத்தூர் ரவுண்டானா,ஆகிய நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று தொகுதி மக்களிடம் நேரில் கலந்துரையாடினார்.

வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்,சிறுகடை  வியாபாரிகள், பாதசாரிகள்,ஷாப்பிங் வந்த பொதுமக்ககள், தொழிலாளர்கள் என பலரையும் சந்தித்து பேசினார்.
அவர்கள் சுட்டிக்காட்டிய விசயங்களை குறிப்பெடுத்துக் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் MLA அவர்கள் கூறினார்கள்.

MLA அவர்களை நாகை நகர மக்கள் ஆவலுடன் வரவேற்று,கை குலுக்கி உரையாடியது குறிப்பிடத்தக்கது.

இவண்,

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
02_04_17

Top