திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை! செப்10 முற்றுகைக்கு நூற்றுக்கணக்கானோரை திரட்ட முடிவு! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜூலை;30.,

திருப்பத்தூர் மாவட்ட மஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஆம்பூரில் மாவட்ட செயலாளர் M.ஜகிருல் ஜமால், தலைமையில் நடைப்பெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று , ஆய்வு நடத்தினார்.

ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்காக, செப் 10 அன்று மஜக முன்னெடுக்கும் தலைமைச் செயலக முற்றுகை ஆயத்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் மாவட்டம் முழுக்க சுவர் விளம்பரங்கள் வரைவது குறித்தும், நன்கொடைகள் திரட்டி வாகன முன்பதிவுகள் செய்வது குறித்தும், ஆட்டோக்களில் ஃப்ளக்ஸ் விளம்பரங்கள் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாவட்டம் முழுக்க நூற்றுக்கணக்கானோரை திரட்டி சென்னைக்கு அழைத்து வரும் வகையில் பரப்புரை மேற்கொள்வது குறித்தும் திட்டமிடப்பட்டது.

திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலிடப் பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான அப்சர் சையது அவர்கள் கட்சி வளர்ச்சி குறித்து நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் முன்னா மற்றும் ஜூபேர் , ஆம்பூர், வாணியம்பாடி நகர நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#News18TamilNadu #திருப்பத்தூர்_மாவட்டம்
30.07.2022