மதுரை.ஏப்.12., இன்று மதுரை வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேதாஜி சுபாஷ் சேனாவின் மாநில தலைவர் டாக்டர்.V. மகாராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ் ஆகியோர் உடன் இருந்தார். தேவர் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் அவற்றை சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துனர். இது குறித்து சட்டமன்றத்தில் பேசுவதாக பொது செயலாளர் வாக்குறுதி அளித்தார்கள். சமூக நல்லிணக்கம், சுற்றுசூழல் பாதுகாப்பு, பின்தங்கிய மக்களின் மேம்பாடு ஆகிய களங்களில் மஜகவும், நேதாஜி சுபாஷ் சேனாவும் இணைந்து செயல்படுவோம் என இரு தரப்பும் உறுதியேற்றுக் கொண்டனர். இறுதியாக மஜக பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சட்டமன்ற உரைகளுக்கும், சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் நேதாஜி சுபாஷ் சேனாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING 12.04.2017
தமிழகம்
தமிழகம்
தஞ்சை வழுத்தூரில் மஜகவின் மாவட்ட கலந்தாய்வு & புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்..!
தஞ்சை.ஏப்.11,.நேற்று தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் ராயல் மஹாலில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் மாவட்ட கலந்தாய்வு & புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்தினார்கள். உடன் மாநில வர்த்தக அணி செயலாளர் நாட்டாமை யூசுப் ராஜா, மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிளை, பகுதி, நகரம், ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் புதிய உறுப்பினர்களாக மற்ற அமைப்பு, கட்சியில்இருந்து விலகி வந்த எழுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை மாவட்டம். 10.04.2017
தஞ்சையில் அனைத்து கட்சியின் ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில விவசாய அணி செயலாளர் பங்கேற்பு..!!
தஞ்சை.ஏப்.11., காவேரி நதிநீர் உரிமையை மீட்க, விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், மாணவர் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டார்கள். உடன் மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை மாவட்டம். 11.04.2017
குடியாத்தம் தீப்பெட்டி தொழிற்சாலை தீ விபத்து மீட்பு பணியில் மஜக…
வேலூர்.ஏப்.11., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பலமனேரி ரோடு, லட்சுமணா புரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று மாலை திடீர் என தீ விபத்து ஏற்ப்பட்டது. தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் ஒன்றிய நிர்வாகிகள் உடனடியாக தீ விபத்து ஏற்ப்பட்ட இடத்திற்கு சென்று தீயனைப்பு துறை.மற்றும் காவல்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட 20 க்கும் மேற்ப்பட்ட தொழிலாழர்களை அரசு மற்றும் தனியார் அவசர ஊர்திகளில் ஏற்றி கொண்டு அரசு தலைமை மருத்துவ மணையில் அனுமதிக்க பட்டனர். இதில் மஜக ஒன்றிய நிர்வாகிகள் காலு என்கிற Y.இம்தியாஸ், W.அமீன், Y.அம்ஜத், M.இம்தியாஸ், l.சாதிக், R.T.சலாம், இம்ரான், ஜாபர், மஸ்தான், காதர் பாஷா, சல்மான் ஆகியோர் தீ விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மருத்துவ மனைக்கு பார்க்க வந்த பொதுமக்களும், அரசு அதிகாரிகளும், துரிதமாக செயல்பட்டு கடப்பாறைகளுடன் மேற்க்கூரையில் ஏறி மீட்பு பணியில் ஈடுபட்ட மஜகவினர்க்கு தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.. தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் மேற்கு மாவட்டம். 10.04.2017.
தஞ்சை விவசாயிகள் போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு .!
தஞ்சை.ஏப்.10., தஞ்சாவூரில் தொடர்ந்து 14 நாட்களாக தோழர் மணியரசு தலைமையில் காவிரி மீட்புக் குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் உமா பாரதி கொண்டு வந்திருக்கும் ஒற்றை தீர்ப்பாய சட்டத்தை எதிர்த்தும் நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகள் எழுச்சியோடு பங்கேற்று வருகிறார்கள் . இன்று மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை ஆதரித்து எழுச்சியுரையாற்றினார் . அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . கடந்த இரண்டு வாரங்களாக இப்போராட்டத்தில் தஞ்சை நகர மஜகவினர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது . தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை தெற்கு மாவட்டம். 10.04.2017