கோவை.மே.01., கிணத்துக்கடவு பகுதி குறிச்சிபிரிவு (MJTS) பாரம்தூக்கும் சங்கத்தின் சார்பாக மே தின கொடியேற்று விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட (எம் ஜே டி எஸ்) செயலாளர் கு.சுதீர் தலைமையில், கோவை மாநகர் மாவட்ட துனை செயலாளர் டி எம் எஸ் அப்பாஸ் கொடியேற்றி சிறப்பித்தார். கோவை மாநகர மாவட்ட துனை செயலாளர் பி.எம்.ஆர்.ரபி அவர்கள் இனிப்பு வழங்கினார். இதில் பாரம் தூக்கும் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கினத்துக்கடவு பகுதி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொன்டு மிக சிறப்பாக நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தார்கள்... தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. கோவை மாநகர் மாவட்டம் #MJK_IT_WING 01.05.2017
தமிழகம்
தமிழகம்
அதிராம்பட்டினத்தில் மஜக எழுச்சி பொதுக்கூட்டம்!
தஞ்சை.ஏப்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று 28-04-2017 வெள்ளிக்கிழமை மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் வல்லம் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. நூருல் அமீன் ரஹ்மானி அவர்கள் நீதிபோதனை வழங்க நகர செயலாளர் முகம்மது செல்ல ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார், அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர், மாவட்ட நிர்வாகிகள், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் கிளைகளின் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், முன்னாள் மாநில அமைப்புச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமீம் அஹமது உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியினை குவைத் மண்டல செய்தி தொடர்பாளர் அப்துல் சமது தொகுத்து வழங்கினார். இறுதியாக நகர பொருளாளர் சாகுல் ஹமீது நன்றி உரை ஆற்றினார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING தஞ்சை தெற்கு மாவட்டம் 28-04-2017
மாணவர் இந்தியா சார்பில் NEET தேர்வை ரத்து செய்யக்கோரி முற்றுகை போராட்டங்கள்…
சென்னை.ஏப்.28., ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை 29.04.2017 சனிக்கிழமை காலை 10மணிக்கு சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் மாலை 4மணியாளவிலும் மாணவர் இந்தியா மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டங்கள் நடைபெற உள்ளது. தகவல் ; ஊடக பிரிவு மாணவர் இந்தியா 28.04.2017
திருப்பூர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா!
திருப்பூர், ஏப் :24., திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் திருப்பூரில் கொடியேற்றி வைத்து புதிய மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில இணை பொதுசெயலார் மைதீன் உலவி, துணை பொதுசெயலாளர் ஈரோடு பாருக், மாநில செயலாளர் கோவை சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, கொள்கை விளக்க செயலாளர்கள் கோவை நாசர், திருப்பூர் ஹைதர்அலி, விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் . இதில் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், அதிகபடியாக உறுப்பினர் சேர்பது எனவும் முடிவு செய்யபட்டது. தகவல் :- தகவல் தொழில் நுட்பஅணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING திருப்பூர் மாவட்டம் 23.4.2017.
காயிதே மில்லத் ஊடக படிப்பு தொடக்க விழாவில் மாணவர் இந்தியா..!
சென்னை.ஏப்.24., காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக QIAMS ஊடகப் படிப்பு தொடக்க விழா சென்னை ஹயாத் ரெஜென்ஸி ஹோட்டலில் நடைப்பெற்றது. ஊடகத்துறையில் ஒர் உண்மை நிலையை கொண்டு வர அறக்கட்டளையின் செயலாளர் தாவூத் மியாகன் அவர்களின் முயற்சி பாராட்டத்திற்குரியது. சிறுபான்மை மற்றும் தலித் சமுதாய மக்கள் நிச்சயம் ஊடகத்துறையில் பணியாற்ற வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பத்திரிக்கை ஆசிரியர்கள் நக்கீரன் கோபால், ஞானி உள்ளிட்டோர் வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் ஆகியோர் பங்கேற்றார்கள். தகவல் ; மாணவர் இந்தியா ஊடக பிரிவு, சென்னை. 24.04.2017