ஜன.20., தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பல நாடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்திய தூதரகத்துக்கு எதிரே மலேசிய வாழ் தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினார்.
நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்காக மலேசிய வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை போராட்ட குழுவினர் போராட்டத்தில் பங்கேற்கும் மாறு அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்குள்ள போராட்ட காரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
கோலாலம்பூரில் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி கூறினார். பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார்.
இப்போராட்டத்தில் மலேசிய இந்தியர் காங்கிரஸின் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ என்.முனியாண்டி, மலேசிய ஆஸ்ரமம் ஒருங்கிணைப்பு தலைவர் அன்பில் தர்மலிங்கம், பிரபல சமூக ஆர்வர்லர் பாத்திமா சஸ்னா,மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ்,மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) கோலாலம்பூர் நகர செயலாளர் ரஜபுதீன்,செயற்குழு உறுப்பினர் ஜாகிர் பிஸ்ட்ரோ,சமூக ஆர்வலர்கள் அப்துல் சலீம்,முஸ்தபா கான்,வேங்கை இப்ராஹீம்,சித்திக் பாசா,நாகை மாவட்ட மஜக துணைச் செயலாளர் தோப்புத்துறை மன்சூர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இப்போராட்டத்திற்கு மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் பின்புலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-Wing)
கோலாலம்பூர்.
20_01-17