கடலூர்.மே.17., நேற்று கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்துடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் MA. ஹாஜி முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது, நகர செயலாளர் S. ஃபாஸில் முன்னிலை வகித்தார்கள். இம்முகாமை மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் துவக்கிவைத்தார்கள். இதில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 16-05-2017
தமிழகம்
தமிழகம்
அவசர தேவைக்கு மஜகவினர் 11 யூனிட் இரத்த தானம்!
வேலூர்.மே.16., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈரோட்டை சேர்ந்த #சவ்தான்யா என்கிற 18 மாத குழந்தைக்கு இரத்தப்புற்று நோய் காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஜக முன்னால் மாவட்ட து.செயலாளர் M.ஜாகீர் உசேன் அவர்களிடம் இரத்தம் அவசர தேவை என தொடர்பு கொண்டனர். உடனடியாக களம் இறங்கிய மஜகவினர் அக்குழந்தைக்கு தேவையான 11 யூனிட் இரத்தம் வழங்கினார்கள். குழந்தை #சவ்தான்யா-விற்கு உடல் நலம் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 16.05.2017
மங்கலம்பேட்டை சமூக நீதி மாணவர் இயக்கம் கலைக்கப்பட்டு மஜகவில் இணைந்தனர்!
கடலூர்.மே.15., இன்று தமுமுகவின் மாணவர் அணியான "சமூக நீதி மாணவர்" இயக்கத்தின் கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை கூண்டோடு கலைக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். அனைவருக்கும் மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் வரவேற்று கட்சியின் அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகி மன்சூர், மங்களம்பேட்டை நகர செயலாளர் ஃபைசல் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம் 15-05-2017
மஜகவின் சார்பாக ஆவடியில் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு…
திருவள்ளூர்.மே.15., இன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேருபஜாரில் மாடுகள் சாலைகளில் செல்லும் வாகனங்களில் அடிபடுவதாலும் மேலும் சாலையில் கண்டுகொள்ளாமல் திரியும் மாடுகாளல் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக அது போன்ற மாடுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி ஆவடி நகராட்சி மேலாளரை சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி திருவள்ளுர் மாவட்ட செயலாளர் ஆணையூர் அக்பர் உசேன் தலைமையில், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், ஆவடி நகரச் செயலாளர் சாகுல் ஹமீத், இளைஞர் அணிச் செயலாளர் கரிமுல்லா ஆகியோர் சென்று மனு அளித்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING திருவள்ளூர் மாவட்டம் 15.05.2017
நெல்லிக்குப்பத்தில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி…
கடலூர்.மே.13., இன்று கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக நகர செயலாளர் அப்துல் பாஷித் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இப்ராகிம், மாநில செயற்குழு உறுப்பினர் B.ஷாஜஹான் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். உடன் நகர பொருளாளர் நிஜாம், மாவட்ட துணை செயலாளர்கள் அஜீஸ் மற்றும் நெல்லிக்கும் யூஸுப் ஆகியோர் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 13.05.2017