(தொகுப்பு 3)
நாகை தொகுதிக்குட்பட்ட நாகை நகரம், நாகை ஒன்றியம் ஆகியவற்றில் மழைப் பாதிப்புகள் குறித்து மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், திருமருகல் ஒன்றியத்திற்கும் வருகை தந்து மக்களை சந்தித்தார்.
வாஞ்சூர் பகுதிக்கு வந்தவர் அங்குள்ள மீன் மார்க்கெட் பகுதியில் மீனவர்களையும், பொது மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டார். அங்குள்ள மீன் மார்க்கெட் கூரை இடியும் நிலையில் இருப்பதால், அதை இடிந்து விட்டு மீன் மார்க்கெட்டை புதுப்பிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
பிறகு, பனங்குடி ஊராட்சியில் பெரியார் சமத்துவபுரத்திற்கு வருகை தந்து, பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கடந்த 20 ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு குறை கேட்க வந்த முதல் MLA நீங்கள்தான் என அப்பகுதி மக்கள் வரவேற்றனர். பிறகு, மீனவர் காலனி, சுனாமி குடியிறுப்பு பகுதிகளை பார்வையிட்டார்.
அப்பகுதியில் உள்ள சாக்கடை மற்றும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும், குப்பைகள் மற்றும் கழிவுநீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிறகு, முட்டம் பனங்குடி, உத்தம சோழபுரம், குத்தாலம், கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களுக்கும் வருகை தந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் கொடுத்த மனுக்களை குறித்துக் கொண்டு, அவற்றை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
மேலும், சுற்றி வந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கும் வருகை தந்து, பொருள்கள் வினியோகம் குறித்து மக்களிடம் விசாரித்தார்.
மேலும், மழை-வெள்ள காலத்தில் ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடின்றி கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களிடம் கூறியவர், இதற்கான தேவைகள் குறித்து தன்னை எப்போது வேண்டுமென்றாலும் நேரில் தொடர்புக் கொள்ளலாம் என்றார்.
பிறகு, திட்டச்சேரி வருகை தந்து, தன்னுடன் வந்த அரசு அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், உள்ளிட்டவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
மேலும், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து துரித நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
நிறைவாக மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், பயீர் காப்பீட்டு தொகை குறித்தும் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசினார்.
மழை காலம் என்பதால் ஆடு, மாடுகளுக்கு தடுப்பூசி போடவும், மழையால் இறக்கும் கால்நடைகளுக்கு உரிய சான்றிதழை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.
இச்சந்திப்புகளில் MLA அவர்களுடன் வருவாய் துறை அதிகாரிகள், நாகை முபாரக், திருமருகல் ராதா கிருஷ்ணன், ஏனங்குடி முஜிப் ரஹ்மான், ஆறுமுக பாண்டியன், திருநாவுக்கரசு, பனங்குடி பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களும் வருகை தந்தனர்.
தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
09.11.17