சென்னை.ஜூன்.14., இன்று சட்டசபை கூடுவதற்கு முன்பாக சபாநாயகர் அறைக்கு சென்ற ம ஜ க பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மாடு விற்பனை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தான் கொடுத்த தனி நபர் தீர்மானத்தை பரிசிலிக்க வேண்டும் என்று கூறினார், அப்போது அங்கு வந்த முதல்வரிடமும் இது குறித்து கூறினார். பிறகு சபை நடைபெற்ற போது, 11:50 மணியளவில் இது குறித்து சட்டமன்றத்தில் அவர் பேச எழுந்தார். பேரவை தலைவர் அவர்களே…நாடு முழுக்க பரபரப்பாக பேசப்படும் விவகாரம் குறித்து அவையில் பேச விருக்கிறேன் என்றார். அப்போது சபாநாயகர் அவர்கள், அன்சாரி நீங்கள் காலையில் என்னிடம் பேசிய விவகாரம் குறித்து பேசவிரும்பினால் இப்போது வேண்டாம். அது பரிசீலனையில் உள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். அமருங்கள் என்றார். மாடு விற்பனை குறித்து தமிமுன் அன்சாரி அவர்கள் கொடுத்திருக்கும் தனிநபர் தீர்மானம் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது என இதன் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சக MLAக்களிடமும் ஆதரவு
தமிழகம்
தமிழகம்
காந்தி மீண்டும் படுகொலை?
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA அவர்களின் சமூக இணையதள பதிவு) பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்கள் , பிரதமர் மோடியின் மனசாட்சி ஆவார் . மோடியின் எண்ண ஓட்டங்கள் பிரதிபலிப்பவர். இப்போதைய அவரது காந்தி குறித்த கருத்து நாட்டையே உலுக்கியிருக்கிறது . நேதாஜி, அம்பேத்கார் , பகத்சிங் ஆகியோரின் விவகாரங்களில் காந்தியின் மீது நமக்கும் பல அரசியல் விமர்சனங்கள் உண்டு . ஆயினும் அவர் அனைவருக்குமான ஒரு தலைவர் என்பதிலும் அகிம்சை எனும் புதிய கொள்கை மூலம் இந்தியாவுக்கான புதிய அடையாளத்தை உருவாக்கியவர் என்பதிலும் ஐயமில்லை. இந்திய விடுதலைக்கு அவரது தலைமை தான் இறுதி வடிவத்தை பெற்றுக்கொடுத்தது. அவர் நல்லிணக்கமிக்க ஒரு சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டி அதில் உறுதியாக செயல்பட்டார். அதனாலேயே RSS அமைப்பின் ஆதரவாளரான கோட்சே அவரை கொலை செய்தான். காந்தியாரின் மீதான காழ்ப்புணர்ச்சி, கோட்சேயின் கொள்கை வழி பேரப்பிள்ளைகளிடம் இது மிக அதிகமாக இருக்கிறது. அந்த காவிக்கோபத்தில்தான் மார்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் எச்சூரியை தாக்கினார்கள் . அதன் இன்னொரு வடிவமாக பா ஜ க தலைவர் அமித்ஷா அவர்கள் காந்தியை ஒரு வியாபாரி என்று
நாகை தொகுதியில் சிறப்புடன் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் MLA அலுவலகத்தின் சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. EGS பிள்ளை கல்லூரியின் வளாகத்தில் பிரம்மாண்டமான கலையரங்கம் ஆண்கள், பெண்கள் என நிரம்பி வழிந்தது. கொடிகள், தோரணங்கள், விளம்பர பதாகைகள், ஆள் உயர தட்டிகள் எதுவுமின்றி அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துக் கொண்ட நிகழ்வாக இருந்தது. கோயில் குருக்கள், பாதிரியார்கள், ஜமாத்தார்கள், உலமாக்கள் என பல தரப்பினரும் ஒற்றுமையாக அமர்ந்து உரையாடி மகிழ்ந்தனர். மாவட்ட அமைச்சர் மாண்புமிகு O.S.மணியன், மாவட்ட ஆட்சியர் S.சுரேஷ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் ஆகியோர் வந்திருந்தது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. காரணம் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஒன்றாக பொது நிகழ்ச்சியில் அமர்வதில்லை. ஆனால் இந்த இஃப்தார் தமிழகத்திற்கே முன்மாதிரியாக அமைந்துவிட்டது. மேலும், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால், பூம்புகார் MLA பவுன்ராஜ், சீர்காழி MLA பாரதி, மயிலாடுதுறை MLA ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வருகை தந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் அவர்கள் வருகை தந்து தனது தோழமையை வெளிப்படுத்தினார். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் ஒருவர் விடாமல் கலந்துக் கொண்டது நிகழ்ச்சியின்
மஜகவின் கடலூர் (தெ) மாவட்ட செயல்வீரர் கூட்டம்…
கடலூர்.ஜூன்.11., கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் 10-06-2017 நேற்று இரவு நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில செயலாளர் தைமிய்யா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினர். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கிளை நிர்வாகிகள், செயல்பாட்டாளர்கள் பங்கெடுத்தனர். தகவல் தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் (தெ) மாவட்டம் 10-06-2017
மத்திய அரசை கண்டித்து தமிழ்ப்புலிகள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்…! மஜக பங்கேற்பு…!!
தூத்துக்குடி.ஜூன்.11., நேற்று 10.06.2017 தூத்துக்குடியில் மாட்டு அரசியல் நடத்தும் மத்திய அரசை கண்டித்தும், தோழர்.திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழ் புலிகள் அமைப்பினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உறையாற்றினார்கள். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தூத்துக்குடி மாவட்டம், #MJK_IT_WING 10.06.2017