சென்னை.ஜூன்.14., இன்று சட்டசபை கூடுவதற்கு முன்பாக சபாநாயகர் அறைக்கு சென்ற
ம ஜ க பொதுச் செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மாடு விற்பனை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தான் கொடுத்த தனி நபர் தீர்மானத்தை பரிசிலிக்க வேண்டும் என்று கூறினார், அப்போது அங்கு வந்த முதல்வரிடமும் இது குறித்து கூறினார்.
பிறகு சபை நடைபெற்ற போது, 11:50 மணியளவில் இது குறித்து சட்டமன்றத்தில் அவர் பேச எழுந்தார். பேரவை தலைவர் அவர்களே…நாடு முழுக்க பரபரப்பாக பேசப்படும் விவகாரம் குறித்து அவையில் பேச விருக்கிறேன் என்றார். அப்போது சபாநாயகர் அவர்கள், அன்சாரி நீங்கள் காலையில் என்னிடம் பேசிய விவகாரம் குறித்து பேசவிரும்பினால் இப்போது வேண்டாம். அது பரிசீலனையில் உள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். அமருங்கள் என்றார்.
மாடு விற்பனை குறித்து தமிமுன் அன்சாரி அவர்கள் கொடுத்திருக்கும் தனிநபர் தீர்மானம் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது என இதன் மூலம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சக MLAக்களிடமும் ஆதரவு திரட்டி வருவது குறிப்பிடதக்கது.
தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
14.06.2017